காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் – விமர்சனம்!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் – விமர்சனம்!

கோலிவுட்டில் பிரமாண்ட படங்களை எடுக்க ஷங்கர், செண்டிமெண்ட் படங்களுக்கு பாண்டிராஜ், கமர்சியல் படங்களுக்கு வெங்கட் பிரபு அல்லது அல்லது சுந்தர் சி என்று அடையாளம் சொல்லும் போக்கில் சாதி படங்கள் எடுக்க மட்டும் லாயக்கானவர் என்றால் முத்தையா மட்டுமே .திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என்ற போர்வையில் 2013 ஆம் வருஷம் குட்டிப்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆனவரிவர். முதல் படத்தில் இருந்தே கிராமத்தை மையமாக கொண்டு வன்முறைகளை பற்றி மட்டுமே பேசியிருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் எடுத்த அத்தனை படங்களுமே சாதியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சாதியுடன், மதத்தையும் கோர்த்து ஒரு அதிரி புதிரி சினிமாவை வழங்கி கடுப்பேற்றியுள்ளார்.

அதாவது அப்பா, அம்மா மட்டுமின்றி தன்னை பாதுகாத்து வளர்த்த மாமா பாக்யராஜ் என அனைவரையும் உறவினர்களின் ஆவேசம் மற்றும் சூழ்ச்சிகளால் இழந்த சித்தி இத்னானி தன் அண்ணனின் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார் . ஆனால், அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு சித்தி இத்னானியையும் மணமுடித்து தங்கள் வீட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இதற்கு ஒத்து வராத அவர், மதுரை ஜெயிலில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்பவரை சந்திக்கச் செல்கிறார். யார் இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்? அவர் ஜெயிலுக்கு செல்ல என்ன காரணம்? சித்தி இத்னானி ஏன் அவரை சந்திக்க செல்கிறார் என்ற கேள்விகளுக்கு பதில்தான் இப்படத்தின் கதை.

டைட்டில் கேரக்டரில் ஆர்யா வருகிறார், போகிறார்.. ஆனால் ஏற்றுக் கொண்ட வேஷம் அவரு கொஞ்சமும் ஒட்டவில்லை ..வசன உச்சரிப்போ நடிப்ப்போ அல்லது சண்டை காட்சிகளில் கூட கொஞ்சம் கூட அக்கறைக் காட்டாமல் அலட்சியப்படுத்தீருக்கிறார். கட்டுமஸ்தான உடம்பு மட்டும்தான் இருக்கிறது தவிர மத்தபடி இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கும் இவருக்கும் சுத்தமாகவே செட்டாகவில்லை. அதிலும் நம் சீட் பக்கத்தில் இருந்த தமிழ் இந்து ரிப்போர்ட்டர் சொன்னது போல் முத்தையாவின் ஹீரோக்கள் தொடை தெரிய வேட்டி கட்டுவார்கள். இந்தப் படத்தில் வேட்டியை கழட்டி வைத்து வெறும் அண்ட்ராயருடன் சண்டையிடுகிறார் ஹீரோ. இதனால்தன் காஸ்ட்யூம் செலவை பெருமளவில் மிச்சமாக்கி தயாரிப்பாளருக்கு நன்மை சேர்த்திருக்கிறார் ஆர்யா. அதிலும் பஞ்ச் டயலாக்குகள் பேசும் இடங்களிலெல்லாம் சிரிப்பையே வரவழைக்கிறார்.

சித்தி இத்னானியை சுற்றியே கதை சுழலுகிறது..ஆனால் இவரை வில்லேஜ் கேர்ள் ரோலில் ஏற்றுகொள்ள நேரம் பிடிக்கிறது. டப்பிங்கில் அலட்சியம் காட்டியதாலேயே ஒட்டு மொத்த படத்தின் நோக்கமும் விலகி விடுகிறது.ஜமாத் தலைவராக நடிகர் பிரபு நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் சில நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை பக்காவாக செய்திருக்கிறார்கள்.

ஆனால் திரைக்கதை என்ற சமாச்சாரத்தையே மறந்து விட்டார்கள்.. ஆறேழு பிளாஷ் பேக்கும், ஃபைட்டும் வைத்து இடையிடையே விசு பாணியில் சில நல்லிணக்க வசனங்களை கோர்த்து சொல்வதெல்லாம் சினிமா லிஸ்ட்டில் சேராது இல்லையா?

மார்க் 2/5

Related Posts