‘அங்காரகன்’ – விமர்சனம்!

‘அங்காரகன்’ – விமர்சனம்!

ருந்தேள் ராஜேஷ் என்பவர் எழுதிய கதைக்கு ஸ்ரீபதி என்பவர் திரைக்கதை எழுத, மோகன் டச்சு ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை திகிலோடு சொல்ல முயன்றவர்கள் தோற்று விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.. எடுத்துக் கொண்ட கதையை எப்படி சொல்ல வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறைக்கூட இல்லாமல் காட்சிகளை கையாண்டு முழு படத்தையும் சொதப்பியிருக்கிறார்கள்.

அதாவது குறிச்சி மலை வனப்பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பலர் தங்குகிறார்கள். அங்கிருக்கும் ராணி பங்களா பல வருடங்களாக திறக்கப்படாமல் இருக்க, அங்கு வரும் புது மேனேஜர் அந்த பங்களாவை திறந்து அங்கு விருந்து ஒன்றை நடத்துகிறார். ரிசார்ட்டில் உள்ளவர்கள் அனைவரும் அந்த விருந்தில் பங்கேற்க, திடீரென்று இரண்டு பெண்கள் மாயமாகிவிட, அதை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி சத்யராஜ், அங்கிருப்பவர்களிடம் விசாரணை நடத்தும் போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருவதோடு, இறுதியில் அங்கு நடக்கும் அனைத்துக்கும் அங்காரகன் தான் காரணம் என்பதும் தெரிய வருகிறது. யார் அந்த அங்காரகன்?, யாரும் அழைக்காமல் ரிசார்ட்டுக்கு திடீரென்று வந்த போலீஸ் அதிகாரியான சத்யாராஜின் உண்மையான முகம் என்ன? என்பதுதான் இப்படத்தின் கதையாம்

நாயகன் ஶ்ரீபதி, மனைவி மீது சந்தேகப்படுபவராக , எந்நேரமும் குடித்துவிட்டு தன் மனைவியிடம் பேச முயலும்.மற்றொரு வாலிபரை கழுவி கழுவி ஊற்றுகிறார். ஹீரோ என்பதால் நடனமும் ஆடுகிறார். டூயட் கூட உண்டு என்பதால் கடுபேற்றுவதில் ஸ்கோர் செய்கிறார் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வந்த சத்யராஜ் இப்படத்தில் தனது ஆரம்ப கட்ட வேடமான வில்லன் வேடத்துக்கு மாறி மிரட்டுவார் என்று பார்த்தால் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சத்யராஜ் இப்படத்தில் தனது ஆரம்ப கட்ட வேடமான வில்லன் வேடத்துக்கு மாறியிருப்பது பழைய நினைவுகளை கண்முன் கொண்டு வருகிறது. போலீசாக வந்தாலும் அவர் வில்லனாக கிளைமாக்சில் மாறுவது ஷாக். குடிகாரனாக இருந்தாலும் கணவரை விட்டுக்கொடுக்காத மனைவியாக வரும் நியா சில இடங்களில் கவர்ச்சி காட்டி கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறார். ரெய்னா காரத் வெள்ளைக்கார ராணியாக வந்து ஸ்கோர் செய்கிறார்.

ஜூலியன் அண்ட்.ஜெரோம் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது

கு.கார்த்திக் பாடல் எழுதி இசை அமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். எடிட்டிங் வளர் பாண்டியன் என்று டைடில் கார்டில் போடுகிறார்கள். ஆனால், படத்தை பார்த்தால் எடிட் செய்தது போலவே இல்லை. எடுத்த காட்சிகளை அப்படியே கோர்த்து அனுப்பி விட்டார் போலும்.

ஒளிப்பதிவு இயக்கம் என இரு பணிகளை மோகன் தச்சு கையாண்டிருக்கிறார்

ஒரு படத்தின் ஸ்கீரின்பிளே எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் இந்த அங்காகரன்

மார்க் 1.5/5

error: Content is protected !!