ஸ்ட்ரைக்கர் – விமர்சனம்

ஸ்ட்ரைக்கர் – விமர்சனம்

`பலருக்கும் இன்றும் பயம் ஏற்படுத்தும் பேய் என்பதே உண்மையில் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கே விடை இன்னும் அறியப்படவில்லை. ஆனால், இந்த ஒயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேச முடியும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையில் இயங்கும் நவீன முறையில் ஆவிகளோடு பேசும் பயிற்சிக் கூடத்தில் பயிலும் ஒருவனுக்கும் ( ஜஸ்டின் விஜய்), அவனைத் தனது யூ டியூபுக்காக பேட்டிகாண வரும் பெண்ணுக்கும் ( வித்யா பிரதீப்) சிநேகம் ஏற்பட, இருவரும் செத்துப் போன ஒருவரின் ஆவி இருக்கும் வீட்டுக்குள் அந்த ஆவியுடன் பேசப் போகிறார்கள் . அப்போது ஆவிப் பயிற்சியாளர் ( கஸ்தூரி) கொடுக்கும் அறிவுரைகளை மீறி அவர் இயங்க ஆவி கடுப்பாகிறது . அதன் பிறகு நடப்பதெல்லாம் திடீர் திருப்பங்களாக அமை கின்றன.இப்படிக்கூட நடக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு கிளைமாக்சை முடிப்பது அதிர்ச்சி. அந்த அதிர்ச்சிக்காக பல காட்சிகளை பொறுமையாக சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஹீரோ ஜஸ்டின் விஜய், நடிப்பில் இன்னும் கவனமாக இருந்து கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருந்திருக்கலாம். காட்சிகளை தன்வசப்படுத்த பல இடங்கள் இருந்தும் ஜஸ்டின் விஜய் அதை சரியாக பயன்படுத்த தவறி படத்தின் ஓட்டத்தைக் கெடுத்து விட்டார். சோசியல் மீட்யாவில் மட்டுமே ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அமானுஷ்ய பாடம் நடத்தும் ஆசிரியையாக நடித்திருக்கிறார். பேய் மற்றும் ஆன்மா பற்றி அவர் தரும் விளக்கங்களால் நமக்கே ஒயிஜா போர்ட் எங்கே கிடைக்கும் என்று நினைக்க வைத்து விடுகிறார்.

விஜய் சித்தார்த் இசை பெரிதாக பயமுறுத்தவில்லை

ஜே.எம்.ராப்ரி நாத் டார்க் ரூம் காட்சிகள் அச்சமூட்டுகிறது.

இயக்குனர் எஸ். ஏ.பிரபு பாதிவரை விளக்கம் சொல்லியே காட்சி களை நகர்த்துவதால் ஆர்வம் குறைகிறது. அதிலும் `உடம்பே ஆலயம் உயிரே ஆண்டவன்’ என அறிந்துகொண்ட நமது முன்னோர்கள் சிலர் வியக்கத்தக்க சித்திகளை தங்களது முயற்சியால் அடைந்தார்கள். அதனால், `சித்தர்கள்’ ஆனார்கள். `உடம்பின் சூட்சுமங்களை அறிந்துகொண்டு, தவத்தாலும் தகுந்த மூலிகைகளைக் கொண்டும் அவர்கள் அட்டமா சித்திகளை அடைந்தார்கள்’ எனக் குறிப்பிடுகின்றன சில நூல்கள். சித்தர்களும், சித்தர்களுக்குப் பின்னர் வந்த சிலரும் அரிய மூலிகைகளைக் கொண்டு சில சித்துவேலைகளைச் செய்தார்கள் என்று சொன்னதற்கும் எடுத்த படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் கடுப்பேற்றி விட்டார்கள் மை லார்ட்

ஆனால் ஹேப்பியான சேதி என்னவென்றால் படம் ஓடுவது என்னவோ ஒன்றரை மணி நேரம்தான்

மார்க் 2/5

error: Content is protected !!