32°C
விளம்பரம்
Advertisement

ஆழி – விமர்சனம்!

admin Published: February 27, 2026 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


டுக்கடலில் ஒரு மீன்பிடி படகிற்குள், அதிகாரத்திற்கும் உயிர் பிழைப்புக்குமான போராட்டத்தை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறது ‘ஆழி’. தந்தை – மகள் பாசத்திற்கும், காதலனின் போராட்டத்திற்கும் இடையிலான இந்த மோதல் திரைக்கதையில் இன்னும் வேகம் கண்டிருந்தால் ஆழமாக இருந்திருக்கும்.

கதைக்களம்:

பகுதி நேர மெக்கானிக்காக இருந்து கொண்டு கடத்தல் தொழிலில் ஈடுபடும் கொடூர வில்லன் சரத்குமார். அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், சக மாணவன் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். இதையறிந்த சரத்குமார், காதலனை நடுக்கடலுக்குக் கடத்திச் சென்று கொலை செய்யத் திட்டமிடுகிறார். அந்த மரணப் பிடியில் இருந்து காதலன் தப்பித்தாரா? காதலி என்னவானார்? என்பதே மீதிக்கதை.

நடிப்பு:

  • சரத்குமார்: பாசக்கார அப்பா, கொடூர வில்லன் என இரு பரிமாணங்களைக் காட்ட முயன்றிருக்கிறார். தோற்றத்தில் மாற்றம் செய்திருந்தாலும் பழைய சாயல் தெரிகிறது. இருப்பினும் தன் அனுபவ நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்.

  • இந்திரஜித் ஜெகஜித்: நாயகனாக வரும் இவர் கதாபாத்திரத்துடன் ஒட்டாமல் தெரிகிறார். மரண பயத்தைச் சொல்ல வேண்டிய இடங்களில் நடிப்பு இன்னும் மெருகேறியிருக்கலாம்.

  • தேவிகா சதீஷ்: சரத்குமாரின் மகளாக வரும் இவர் அழகாகவும், கொடுத்த வேலையை நிறைவாகவும் செய்திருக்கிறார்.

தொழில்நுட்பம்:

ஆனந்த் என்.நாயரின் ஒளிப்பதிவு குறுகிய இடங்களுக்குள் நடக்கும் காட்சிகளை நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. மினிநேச்சர் முறையிலான காட்சிகள் அதிகம் மெனக்கெடல் இல்லையென்றாலும் ஓகே ரகம். ஜாஸி கிப்ட் மற்றும் வில்லியம் பிரான்சிஸின் இசை சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ரசூல் பூங்குட்டியின் ஒலி வடிவமைப்பு கச்சிதம் என்றாலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இயக்கம்:

இயக்குநர் மாதவ் ராமதாசன் ஆழ்கடலில் இருவருக்கிடையிலான உடல் மற்றும் மன ரீதியான போராட்டத்தைச் சொல்லத் துணிந்திருக்கிறார். ஆனால், கதையில் உள்ள லாஜிக் ஓட்டைகளும், அழுத்தமில்லாத காரணங்களும் திரைக்கதையைப் பலவீனப்படுத்துகின்றன. வில்லனைக் காப்பாற்ற நாயகன் போராடும் இரண்டாம் பாதி திருப்பங்கள் சுவாரஸ்யமாக அமையவில்லை.

பிளஸ்:

  • சரத்குமாரின் நடிப்பு.

  • இறுதிக்காட்சியில் நாயகனின் காதலுக்கும், தந்தையின் பாசத்திற்கும் இடையே நடக்கும் உணர்ச்சிகரமான மோதல்.

மைனஸ்:

  • மெதுவான திரைக்கதை.

  • லாஜிக் மீறல்கள்.

  • நாயகனின் பலவீனமான நடிப்பு.

சரத்குமாரின் நடிப்புக்காகவும், இறுதிக்காட்சிக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.

மார்க்: 2.25 / 5

உடனடி செய்திகள்