ஒரு நாட்டுக்கான தலைவரை செதுக்கும் பயணமிது!

ஒரு நாட்டுக்கான தலைவரை செதுக்கும் பயணமிது!

முதலில் பாரத் ஜோடா பற்றி எழுதும் பொழுது எனக்கு ஒரே ஒரு எண்ணம் மட்டுமே. இன்று நாம் மாற்றதிற்கு தயார் ஆகாவிடில் நம் அடுத்த தலைமுறை வெறுப்பில் வாழும். அதற்காக உறுதியாக RG யாத்திரையை ஆதரிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். கன்னியாகுமரியில் கிட்டதட்ட அரை மணி நேரம் நடந்த உரையாடலில் அவரை உன்னித்து கவனித்தேன். அலைபாயும் கண்களில் ஒரு நேர்மை இருந்தது. இன்னொன்று கூடுதலாய் உறுதி தேவைப்படும், அதற்கு இந்த நடைப்பயணம் உதவும் என யோசித்தேன். காந்தி ஒரு நாளில் காந்தியாக மாறவில்லை. மக்களோடு கலந்து, கேட்டு ,உரையாடியே காந்தியாக மாற முடிந்தது. இறக்கும் வரை வாழ்வைபற்றிய பரிசோதனைகள் இருந்தது. நேரு சுதந்திரம் பின் ஒரு இங்கிலாந்து டிவி பேட்டியில் சிறை வாசம் என்னை செதுக்கியது என்பார். அதை ஆங்கிலேயர் இழைத்த கொடுமை என சொல்லவில்லை.

இந்த பாதைகளும், பயணங்களுமே தலைவர்களை உருவாக்கும். பாரத் ஜோடோ யாருடைய ஐடியாவாக இருப்பினும் அது ஒரு நாட்டுக்கான தலைவரை செதுக்குகிறது. அப்பயணம் வெறுப்புக்கான, மதத்துக்கான பயணமாக இல்லாமல் அன்புக்கான, ஒற்றுமைக்கான பயணம். பெயரே ‘இந்திய ஒற்றுமை பயணம்’. எனவேதான் நான் கலந்துக்கொள்வதில் மிக ஆர்வமாய் இருந்தேன். இதற்கு பொது மக்களின் ஆதரவு மிக அவசியம் எனக்கருதினேன். மக்களை முக்கியமாய் மிகச்சாதரண மக்களை சந்திக்கிறார். கேள்விகளால் புரிகிறார். ஜஸ்ட் சந்திப்பாக இல்லை. ஒவ்வொருவரிடமும் உரையாடுகிறார். சிக்கல்களை பேசி தெளிவுப்படுத்துகிறார் அல்லது கற்றுக்கொள்கிறார். :எனக்கு எல்லாம் தெரியும்..

நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா’. இந்த attitude கள் சுத்தமாய் ஆர்.ஜி யிடம் இல்லை.முதல் நாள் பேச்சுக்கும் கர்னாடாகாவில் விவசாயிகள் முன் பேசிய பேச்சுக்கும் நல் மேம்படுத்தலை கண்டேன் அது திறந்த மனதுடன் கற்று, செயலில் இருந்தால் மட்டுமே முடியும். வேகக்கற்றல். 900 கி.மிட்டருக்குள் பெரும் பாய்ச்சல். ஒருவரை முழு மனதுடன் சப்போர்ட் செய்ய வேண்டுமெனில் அவரைப்பற்றிய கற்றல் தேவை. என் எழுத்தை பார்த்து தேவையற்ற ஒருவரை பற்றிய கணிப்பிற்கு ஒருவர் கூட வந்து விடக் கூடாது என்ற பொறுப்பும் உள்ளது.

முதலில் ஐடியாலஜி அதாவது ஒற்றுமை பயணம் என்பதற்கு இருந்த ஆதரவு இன்று இவரின் தலைமைக்கும் சேர்ந்த ஆதரவாய் மாறியக் காரணம் நேரடியான கற்றல் . நாட்டில் வெறுப்பு இதற்கு மேல் வளர்ந்தால் நம் தலைமுறை செழிக்காது .அன்பு மட்டுமே தேவை. ‘தலைமை எவ்வழி, மக்கள் அவ்வழி’. அன்பின் வழி, ஒற்றுமை வழி என நாட்டில் எல்லாரும் அறிந்த ஒருவர் தயார் ஆகிக்கொண்டுள்ளார். அவருக்கு இந்த சமயத்தில் தேவை விமர்சனம் அல்ல. ஆதரவு. வலிமை பெற்ற பின், நாமும் கரம் கோர்த்து வலிமைப்படுத்திய பின் நம் விமர்சனங்களை வைக்கலாம்.

அதுவரை நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஆன்லைன் அல்லது நேரடியாக நம் ஆதரவை தெரிவித்துக்கொண்டே இருப்பது . இன்னொரு மாநிலமும் சென்று ஆதரவை தெரிவிக்க இருக்கிறேன். முடிந்த நன்மைகளை இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டும். அவ்ளோதான் அதற்குதான் எழுத்தும், பயணமும்.

அன்பின் வழி செல்வோம்.

கீர்த்தி

error: Content is protected !!