32°C
விளம்பரம்
Advertisement

சோனு சூட் உருவச் சிலையுடன் கோயில்: தெலங்கானா பெருமிதம்! வீடியோ!

admin சேலம் Published: December 21, 2020 1 நிமிட வாசிப்பு சினிமா செய்திகள்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இந்த கொடுங் கொரோனா வைரஸ் பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கில் நடுத்தர குடும்பத்தினர் பலர் ஒரு வேலை உணவிற்கே திண்டாடி வந்தனர்.அவர்களுக்கு அரசு ஒரு பக்கம் உதவுவதாக சொல்லி (மட்டும் வந்த நிலையில்) ,தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து வந்தனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் 28 மாநிலங்களுக்கு உதவி செய்துள்ளார்.அவர் உதவி செய்வதற்காக தனது 10 கோடி மதிப்பிலான சொத்தினை அடமானம் வைத்தார் என்ற செய்தி சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் கொரோனா காலத்தில் உதவிய அவரின் மனிதநேயத்தை பாராட்டி தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்ப தண்டா என்ற கிராமத்தில் மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் சோனு சூட்டிற்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.இந்த கோயில் இன்று திறக்கப்பட்ட நிலையில் அந்த கிராமத்து பெண்கள் சோனு சூட்டின் சிலை முன்பு நடனமாடி, ஆரத்தி எடுத்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தினார்கள்.

பிறமாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி மாட்டிக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல சோனு சூட் உதவியுள்ளார்.அது மட்டுமில்லாமல் வேலைவாய்ப்புத் தளத்தையும் அமைத்துக்கொடுத்து அந்த கிராம மக்களின் நீங்க இடம் பிடித்துள்ளார்.அவரின் மனித நேயத்துக்கு கிடைத்த பரிசு தான் இந்த கோயில் என கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.தற்போது சோனு சூட்டின் சிலை கொண்ட கோயில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்