பார்லிமெண்ட் புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!
சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததன் பேரில் டெல்லியில் ரூ. 971 கோடி மதிப்பில் கட்டப்பட உவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டிய போது இந்தியாவின் 65வது சுதந்திர தின விழாவை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கொண்டாடுவதை விட நமக்கு சிறப்பானதாக என்ன அமைய முடியும்? என்று பெருமிதத்துடன் குறிப்பிடார்.

முன்னதாக புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாது என்ற உறுதிமொழியுடன், நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, வியாழக்கிழமை (10-12-2020) பகல் 1:00 மணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற கட்டிடம் அமையும் இடத்தில் பூமி பூஜைக்கான சடங்குகளை கர்நாடக மாநில சிருங்கேரி மடத்தின் பூஜாரிகள் நிறைவேற்றினர்.
2022-ஆம் ஆண்டில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.புதிய நாடாளுமன்றக் கட்டடம் நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில் அமையவுள்ளது.நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய வலிமையுடன் 64,500 சதுர மீட்டா் பரப்பில் கட்டடம் எழுப்பப்படவுள்ளது.
தரைத்தளம், தரைக்குக் கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் 4 தளங்களுடன் கட்டப் படவுள்ளது. வெளித்தோற்றமும், மொத்த உயரமும் தற்போதைய நாடாளுமன்றத்துக்கு சமமானதாக இருக்கும். காகிதப் பயன்பாட்டுக்கு அவசியமில்லாத வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பெரும் மண்டபம் அமைக்கப்படவுள்ளது. நூலகம், நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஓய்வறைகள், நிலைக் குழுக்களுக்கான அலுவலகங்கள், உணவகம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவை புதிய கட்டடத்தில் அமைக்கப்படவுள்ளன.புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நாடாளுமன்றக் கட்டடக் கட்டுமானப் பணியில் 2,000 போ் நேரடியாகவும் 9,000 போ் மறைமுகமாகவும் ஈடுபடவுள்ளனா்.
இதன் பூமி பூஜையை முடித்த பிறகு அடிக்கல் நாட்டு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, “ இந்தியாவுக்கு சொந்தமான குறியீடுகள் மற்றும் மதிப்பீடுகள் அடிப்படையில் நம்முடைய புதிய நாடாளுமன்றத்தை அமைக்கும் பணி இன்று துவங்குகிறது.இந்தியாவின் 65வது சுதந்திர தின விழாவை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கொண்டாடுவதை விட நமக்கு சிறப்பானதாக என்ன அமைய முடியும்?
Speaking at the Foundation Stone Laying of the New Parliament. https://t.co/Gh3EYXlUap
— Narendra Modi (@narendramodi) December 10, 2020
புதிய நாடாளுமன்றம் பழமையும் புதுமையும் கலந்த கூட்டு கலவையாக அமையும் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வருவதற்கான ஒரு அடையாளமாக அந்தப் புதிய நாடாளுமன்றம் திகழும். முதன் முதலாக இந்திய பிரதமர் என்ற வகையில் இந்த நாடாளுமன்றத்திற்குள் நான் காலடி எடுத்து வைத்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது என்னுடைய தலை தாழ்த்தி அந்த நினைவைப் போற்றுகிறேன்.” என்று தெரிவித்தார்


