தமிழக சுகாதார துறையில் ‘சிகிச்சை உதவியாளர்; பணி வாய்ப்பு!

தமிழக சுகாதார துறையில் ‘சிகிச்சை உதவியாளர்; பணி வாய்ப்பு!

தமிழக சுகாதார துறையில் ‘சிகிச்சை உதவியாளர்’ பதவிக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்:

சிகிச்சை உதவியாளர் (ஆண்) 38, சிகிச்சை உதவியாளர் (பெண்) 38 என மொத்தம் 76 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

டிப்ளமோ (நர்சிங் தெரபி) படிப்பை (இரண்டரை ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2020 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 30, மற்ற பிரிவினர் 18 – 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

கல்வித்தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு. இதில் பத்தாம் வகுப்புக்கு 20%, பிளஸ் 2 வுக்கு 30%, டிப்ளமோ 50% என்ற அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 300.

கடைசிநாள்:

24.12.2020.

விபரங்களுக்கு:  

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts