32°C
விளம்பரம்
Advertisement

காஷ்மீர் விவகாரம் :வதந்தி பரப்புவோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

admin சேலம் Published: August 12, 2019 1 நிமிட வாசிப்பு Updated: August 13, 2019 இந்தியா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து தேசநலனுக்கு எதிராக வதந்திகளை பரப்புவோரின் கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. அத்துடன் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங் களாக பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் தொடர்பாக இந்தியாவிற்கு எதிரான நோக்குடன் தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகளை பரப்பியதாக 4 ட்விட்டர் கணக்குகள் இடைக்காலமாக முடக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக் கையை எடுத்துள்ளது. அத்துடன், இதேபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மேலும் 4 ட்விட்டர் கணக்குகள் விரைவில் முடக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிரிவினைவாதிகள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வந்த எச்சரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்