32°C
விளம்பரம்
Advertisement

தாதா 87 படத்தில் தனிக் கவனம் பெற்ற நாயகி ஸ்ரீபல்லவி!

admin சேலம் Published: March 3, 2019 1 நிமிட வாசிப்பு Updated: March 4, 2019 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.  காதல் என்பது வெறும் உடல் உறவுக்காக மட்டும் அல்ல அது ஒரு பீலிங், அன்பை பறிமாறிக் கொள்வது, என்பதைச் சொன்னாலும் பல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர்,  ஆனால்  ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
“தாதா 87” படத்தில் காதலை புதிய கோணத்தில் சொல்லபட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பலரின் கைதட்டல்களையும் பெற்றது.
“தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்