ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும்! – ராகுல் எச்சரிக்கை!
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து, ரபேல் ரக போர் விமானங்களை வாங்கு வதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் அடைவதற்கு சாதகமாக ஒப்பந்தம் உருவாக் கப்பட்டி ருப்பதாகவும், பாஜக-வினர் இதன்மூலம் பல ஆயிரம் கோடி ஆதாயம் அடைந்துள்ளனர் என்றும் முன்ன்ரே ராகுல் பகிங்கரமாக சொல்லி வந்த நிலையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாண் டேவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஜூலி கேயட் நடிக்கும் படத்தை தயாரிப்பதாக ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மண்ட், ஒப்பந்தம் செய்துள்ளது. ரபேல் போர் விமான ரிலையன்சுக்கு கிடைப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் சினிமா தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தா னது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வரும் வாரங்களில் ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59,000 கோடி மதிப்பிலான 36 ரபேல் ரக போர்விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் பேசப்பட்ட அப்போதைய விலையை விட, தற்போது கூடுதல் விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும், இதில் பெரும் ஊழல் நடந்துள்ள தாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. அதிலும் ஒப்பந்தத்தில் இருந்து இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் நீக்கம், ரிலையன்ஸ் சேர்க்கப்பட்டது எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.
போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன்புதான் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
இந்நிலையில்தான் ரபேல் போர்விமான ஒப்பந்தம் நடைபெற்றபோது பிரான்ஸ் அதிபராக இருந்த ஹோலாண்டேவின் மனைவியை வைத்து ரிலையன்ஸ் படம் தயாரித்தது என்று செய்தி வெளி யாகியுள்ளது. அனில் அம்பானி நிர்வகிக்கும் ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மண்ட், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாண்டேவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஜூலி கேயட் நடிக்கும் படத்தை தயாரிப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் செய்யும் சில நாட்களுக்கு முன்னர் இந்த ஒப்பந்தமும் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியைதான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் ,”போர் விமான ஊழல் உலக அளவிலான ஒன்றாகும். இந்த போர் விமானம் நீண்ட உயரத்திற்கும் வேகமாகவும் செல்லும் என்பது உண்மைதான். இந்த விமானம் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டு களை வீசப்போவது நிச்சயம். இன்னும் சில வாரங்களில் பூதாகரமாக வெடிக்கும். பிரான்சில் இது தொடர்பாக பெரும் பிரச்சினை உருவாக இருக்கிறது. மோடி அவர்களே!, இதை அனில் அவர் களிடம் சொல்லுங்கள்” என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



