தமிழ் குரல் / AI Voice
‘குளோபல் கரப்ஷன் பாராமீட்டர்’ என்று ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசிய நாடுகளில் வசிக்கும் மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதாவது “ஊழலில் எந்த நாடு முதலிடத்தில் இருக்கிறது?”, “எங்கெல்லாம் லஞ்சம் தலை விரித்தாடுகிறது?”, “லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த இந்திய மக்களின் பார்வை எப்படி இருக்கிறது?”, “எந்தப் பதவியில் உள்ளவர்கள் எந்த மாதிரியான ஊழல்களைச் செய்வதாகக் கருதுகிறீர்கள்?” என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. மக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் வெளியாகியுள்ள தகவல்கள் அறிக்கையாக வெளியாகியுள்ளது. அந்த அறிக்கை சொல்லும் செய்தி, கொஞ்சம் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
அக் கருத்துக் கணிப்பில் இந்தியாவில் ஊழல் அதிகரித்து விட்டதாக 41 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் சீனா 71 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நன்றாக இருக்கிறது என 53 சதவிகித மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை ஊழலில் 69 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 65 சதவிகிதத்துடன் வியட்நாம் இரண்டாம் இடத்திலும், 40 சதவிகிதத்துடன் தாய்லாந்து மூன்றாமிடத்திலும் உள்ளன. ஊழல் மிகவும் குறைந்த நாடாக, ஏறக்குறைய இல்லாத நிலை, 0.2 சதவிகிதத்துடன் ஜப்பான் திகழ்கிறது. அதனால்தான் பொருளாதாரத்தில் ஜப்பான் முன்னேறி உள்ளது. ஹாங்காங், தென் கொரியா, ஆஸ்திரேலியா, தைவான் ஆகிய நாடுகளில் எல்லாம் ஊழல் குறைந்த சதவிகிதத்திலேயே உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அடையாள அட்டைகள் வழங்குவதற்கும், அரசு மருத்துவமனைகளிலும்தான் அதிகபட்சமாக 59 சதவிகிதம் அளவுக்கு மக்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாகத் தெரிய வந்துள்ளது. அடிப்படைத் தேவைகளுக்கு லஞ்சம் பெறுவது 53 சதவிகிதமும், காவல்துறையினர் லஞ்சம் பெறுகிறார்கள் என்று 55 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். இதில் வேடிக்கையான விந்தை என்னவென்றால், நீதி கிடைக்கும் என்று மக்கள் நாடிச் செல்லும் இந்திய நீதிமன்றங்களில்கூட லஞ்சம் வழங்க வேண்டியுள்ளதாக 45 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் லஞ்சம் பெறப்படுவதாக 58 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க நாடு முழுவதும் ஊழல் செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 1581 பேர் மீது 13,500 வழக்குகள் உள்ளன. அவற்றை விசாரிக்க 12 தனி கோர்ட்டுகள் அமைக்கப்படும் என்றும் இதற்காக ரூ.7.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
நம் நாட்டெஇல் குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.,வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில், நீதிபதிகள் கண்டனம் .தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள். மனுதாரரின் கோரிக்கையை ஆதரிக்கிறீர்களா.. எதிர்க்கிறீர்களா.. தேத்தல் நடத்துவதே நீங்கள் தான். குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலி்ல் நிற்க வாழ்நாள் தடை விதிக்கவேண்டும் என்கிறார். இதற்கு உங்கள் பதில் தான் என்ன என்று கேள்வி விடுத்தனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கலாம். அப்படிச் செய்தால் தான் குற்றச் செயல்களை தடுக்க முடியும். தற்போதைய சட்டப்படி தண்டனை அடைந்தவர்கள் ஆறு ஆண்டுகள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியாது என்று உள்ளது. அதை வாழ் நாள்தடையாக அதிகரிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம் என்று கூறியிருந்தது.
ஆனால் இதற்கு மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவித்தது. குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க முடியாது. இருப்பினும் அது பற்றி சட்ட கமிஷன் பரிசீலித்து வருகிறது. எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி கோர்ட் அமைப்பது என்பது மாநில அரசுகள் செய்ய வேண்டிய முடிவு. அவர்களின் ஆளுகையில் தான் வருகிறது. இருப்பினும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகளை விசாரிக்க. தனி கோர்ட் அமைக்க எந்தவித தயக்கமும் கிடையாது. என்று மத்திய அரசு கூறியது.
நாடு முழுதும் தனி கோர்ட் அமைத்து குற்ற வழக்குகளை விசாரிக்க முடியமா … எத்தனை கோர்ட்டுகள் அமைப்பீர்கள்.. எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள்.. என்பது பற்றி டிச.,31க்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவின் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்தியஅரசின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க 12 தனி கோர்ட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014 ம் ஆண்டைய புள்ளிவிவரங்களின்படி 1581 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு வழக்குகளில் விசாரணையை எதிர்நோக்கி உள்ளனர். அவர்கள் மீது 13,500 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனி கோர்ட்டுகள் அமைப்பதற்காக ரூ.7.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் அமைப்பது பற்றிய செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை நாளை நடக்கும் என்று தள்ளிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

