32°C
விளம்பரம்
Advertisement

4 கதைகளின் தொகுப்புதான் ‘சோலோ!

admin சேலம் Published: July 29, 2017 2 நிமிட வாசிப்பு Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




தமிழில் விக்ரம் – ஜுவா கூட்டணியில் `டேவிட்’ என்ற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் இந்தியில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் `சோலோ’ என்ற படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் – ஆர்த்தி வெங்கடேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மணிரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட் மற்றும் கெட் அவே ஃபிலிம்ஸ் இணைந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் மற்றும் 15 பாடல்கள் இடம்பெற்றிருப்பது எக்ஸ்ட்ரா செய்தி.

இவ்விழாவில் இயக்குநர் பிஜாய் நம்பியார் பேசிய போது, “’டேவிட்’ எனது முதல் தமிழ் படம் என கூற முடியாது. ஏனென்றால் இந்தியில் வரும் பாதிக் காட்சிகளை தமிழுக்கும் பயன்படுத்தி இருப்பேன். ஆனால், ‘சோலோ’ முழுக்க தமிழிலும் காட்சிப்படுத்தியுள்ளோம். அதுமட்டுமன்றி தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிற்குமே சில கதாபாத்திர நடிகர்களை மாற்றியுள்ளோம். நான்கு கதைகள் சேர்ந்தது தான் இப்படம். வித்தியாசமான 4 கதைகள் ஒரே படத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் படத்தில் ஹைலைட்”என்றார்.

விழாவில் நேற்றைய பிறந்த நாள் நாயகன் துல்கர் சல்மான், “’சோலோ’ மாதிரியான படங்கள் கிடைப்பதே பெரிய விஷயம். மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்தாலும், தமிழில் நிறைய ஊக்கப்படுத்துகிறார்கள். 4 கதைகளின் தொகுப்பு தான் இந்தப்படம். நான்கு கதைகளில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் மற்றும் மலையாளம் என தனித்தனியாக படப்பிடிப்பு நடத்தியிருப்பதால் 8 படத்தில் நடித்த மாதிரி இருந்தது.

எனது அனைத்து படத்தின் நிகழ்ச்சியிலும் மணிரத்னம் சார் இருக்கிறார். ‘வாயை மூடிப் பேசவும்’ தொடங்கி இப்போது வரைக்கும் அவர் இல்லாமல் எனது எந்த நிகழ்ச்சியும் நடந்ததில்லை. இந்த நிகழ்ச்சியிலும் மணி சார் கலந்து கொண்டது என் பிறந்த நாளுக்கு கிடைத்த இரட்டை பரிசாக பார்க்கிறேன்|”என்று பேசினார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்