’கூட்டத்தில் ஒருத்தன்’ படம் எப்படி?

’கூட்டத்தில் ஒருத்தன்’  படம் எப்படி?

ஒரு பத்திரிகையாளராக இருந்த ஞானவேல் இயக்கிய ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை பல பத்திரிகையாளர்களுடன் தான் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வரும் போதே அருகில் அமர்ந்து படம் பார்த்த சக நிருபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ‘கூட்டத்தில் ஒருத்தன்.. ஃபர்ஸ்ட் ஹாஃப் செம சூப்பர். அந்த அளவுக்கு செகண்ட் ஹாஃப் இல்லைன்னாலும் படம் ஓகே தான். போர் அடிக்கலை. ஒரு அப்பாவி, அடாவடி போலீஸை எதிர்த்து வீறு கொண்டு எழும் சினிமாத்தனம் இல்லாமல்.. ஒரு ஆவரேஜ் எப்படி முன்னேறுவானோ அப்படியே காட்டிய ப்ராக்டிக்கல்தனம் பாராட்டுக்குரியது.படம் முழுக்க இளம் ஹீரோ அசோக் செல்வன் நிறைந்திருக்கிறார். செமையா இம்ப்ரெஸ் பண்றார். மூணு வருஷத்துக்கு முன்னாடி பார்த்ததை விட இன்னும் சின்னப் பையனாய் தெரிகிறார். எப்படியோ.. தமிழ் சினிமாவிற்கு அடுத்த விஜய் சேதுபதி ரெடி!’ என்று கமெண்ட் போட்டிருந்தார்.இது சக பத்திரிகையாளர் ஒருவரை அரவணைத்துக் கொள்ள போடப்பட்ட ஷொட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஞானவேல் முதல்முறையாக கையில் எடுத்திருப்பது மிடில் பெஞ்ச் மாணவன் ஒருவன் பற்றிய கதை. பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் முதல் பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்சை பற்றிய அதிகம் பேசுவார்கள். ஆனால் மிடில் பெஞ்ச்சில் இருப்பவர்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை. அப்படி மிடில் பெஞ்சில் அமர்ந்து ஆவ்ரேஜ் மார்க் வாங்கி வரும் மாணவனாக இருக்கும் அசோக் செல்வன், தன்னுடைய வாழ்க்கையில் வெற்றியை அல்லது மகிழ்ச்சியை ருசிக்காமல் ஏங்கி வருகிறார். அபேர்ப்பட்டவர் ஸ்கூல் ஃபர்ஸ்ட் உள்ளிட்ட் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் முதல் பெஞ்ச் மாணவியான ப்ரியா ஆனந்தை காதலிக்கிறார். தனது காதலை ப்ரியா ஆனந்திடம் வெளிப்படுத்தும் அசோக் செல்வனிடம், தன்னை காதலிப்பதற்கு முன்பாக எதையாவது சாதித்துவிட்டு வர வேண்டும் என்று சொல்கிறார் ப்ரியா ஆனந்த்.

இதில், அப்செட்டாகி கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள போகும் நாயகனால் ஒரு பொடியன் காப்பாற்றப்ப டுகிறான். இதையடுத்து சில/ பல டுபாக்கூர் வேலைகள் மூலம் ப்ரியா ஆனந்த் மனதில் இடம்பிடிக்கிறார் அசோக் செல்வன். ஒருகட்டத்தில் அசோக் செல்வன், தனது சொந்த முயற்சியில் அந்த காரியங்களை செய்யவில்லை என்பது ப்ரியா ஆனந்துக்கு தெரிந்து விடுகிறது. இதனால், அசோக் செல்வனை விட்டு பிரிந்து செல்கிறார் அசோக் செல்வன். ம்.. அப்புறம் தனது காதலி வெற்றி கண்டாரா? இல்லையா? அசோக் செல்வன் கூட்டத்தில் ஒருத்தனாக திகழ்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

மிடில் கிளாஸ் மாணவன் என்றால் உடல், எண்ணம் , சிந்தனை எல்லாம் இவ்வளவு டல்லாக இருக்கும் என்பதை புதுசாக காண்பித்துள்ள ஞானவேல் தன் கற்பனைக்கேற்றவாறு அசோக் செல்வனை செதுக்கி உள்ளார். இவரை விட சக் நண்பனான வரும் பாலா மூலம் பல கிளாப்ஸ்களை வாங்கிறார். ” மொத்த சாக்லெட்டையும் ஒண்ணா வாயில போட்டுக்கிற குழந்தை மாதிரி , என்ன பாஸ் எல்லா பொண்ணுங்களையும் நீங்களே மொத்த மா சாப்பிடுறீங்க … ” என ஹீரோவை சதாய்க்க தொடங்கி, ’நாயும் மச்சான், நானும் உனக்கு மச்சானா?’, ‘எப்ப நீ படிக்கிற பையனாகிட்டியோ அப்பவே என் நண்பன்கிற தகுதியை இழந்திட்ட ‘‘சூசைட் ரேஞ்ஜுக்கு அவ ஒர்த்தடா …இவளுங்களை எல்லாம் நீங்கதான்டா ஏத்தி விடுறீங்க …’ என ப்ரியா ஆனந்துக்காக , தற்கொலைக்கு முயற்சிக்கும் அஷோக்கையும் ,ப்ரியா ஆனந்தையும் கலாய்ப்பதில் தொடங்கி , “ஒரு நாயைக் காணும் னு தேடு தேடுன்னு தேடுறாங்களே … உன் வீட்டுல பாம் உன்னை தேட மாட்டாங்களா ?” என நாயகியின் தோழியை டபாய்ப்பதில் “பேரு கேட்டா மதம் பேரு சொல்றீங்க நீங்க மதம் பிடிச்ச பெண்ணா ?” என எக்கச்சக்க “பன்ச் ” அடிப்பது என இந்த கேரக்டர் மூலம் பல ஸ்லோ ட்ராவலை உணர விடாமல் செய்வதில் ஜெயித்து விட்டார்.

ஆனால் தன் மகனை ஆக்சிடெண்டாக காப்பாற்றிய அசோக் செல்வனை தம்பியாக நினைத்து ‘ ஊற்றிக்’ கொடுத்து காதல் உண்மையை அறிந்து கொள்ளும் சமுத்ரகனி அக்காதலுக்காக செய்யும் டகால்க்கடி வேலையும், அதனால் ஏற்படும் கிளைமாக்ஸூம் பார்ப்பவர்கள் சமுத்திரகனிக்காக ஒரிரு சொட்டு கண்ணீர் வடிப்பது நிச்சயம்.

நாயகி பிரியா ஆனந்த் தன் பாத்திரமறிந்து ஆக்ட் கொடுத்து அசத்தியுள்ளார். அதே சமயம் நாயகிக்கு திருமணம் நடக்கும் முதல் நாளன்று எடிட் சூட்டையே மணமகன் அறையில் வைத்து அதையும் நாயகியை வைத்து பார்க்க செய்து அதன் மூலம் உண்மையை புரிந்து காதலனிடம் போய் சேர்ப்பது என்பதை எல்லாம் நம்ப முடியாமல் போகிறது என்றாலும் ரசிக்கும் விததில் காட்டி ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர்.

மேலும் தான் சொல்ல நினைத்த சாதனைக்கு அடையாளமாக படம் முடிந்த பிறகும் காட்சிப்படுத்தப்படும் மக்கள் சேவர்களை க் காட்டி ஜனங்களை கட்டி போட வைத்த இயக்குநர் அதிலும் அகரம் பவுண்டேஷன் உருவாக காரணமானவர் இக்கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.. ஆனால் என்ன.. இப்போதையை சூழ்நிலையில் ஒரு படம் எடுத்து ரிலீஸ் செய்வதே சாதனை என்கிற  போது ஞானவேல் (கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தாமல்)  கூட்டத்தில் ஒருத்தன் ஆகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!.

மார்க் 5/ 2.5