ரயில்வே பட்ஜெட் : டு டே அப்டேட் & ஓல்ட் ட்ராக் ரிமைண்டர்!
ம்ம இந்தியாவில் இந்த ரயில்வே உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான் அப்படீங்கறது நமக்கு நல்லாத் தெரியும். நாம் வரலாற்றில் படித்து மறந்து போன டல்ஹவுசி பிரபு கால கட்டத்தில் தான் இதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதன்முதலாக ரயில் சேவை மும்பை-தானே நகரங்களுக்கு இடையே 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி துவங்கிச்சு. 34 கிமீ கொண்ட இந்த தூரத்தை அப்போதைய நீராவி இன்ஜின் ரயில் 57 நிமிடங்களில், அதாவது சுமார் ஒரு மணி நேரத்தில் கடந்தது. இதில் இணைக்கப்பட்டிருந்த 14 பெட்டிகளில் 400 பேர் பயணம் செய்தனர்.

இப்போ அங்குதான் இப்போதைய மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. முதல் ரயில் சேவை துவக்கப்பட்ட அந்த தினத்தையொட்டியே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 முதல் 16 வரை தேசிய ரயில்வே வாரம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந் துள்ள இந்த பகுதி ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு வசதியான நகரமாக விளங் கியது. பொருட்களை சேகரித்து, பாதுகாத்து வைப்பதற்கும இந்த இடம் வசதியாக அமைந்தது. இந்த இடம் போரி பந்தர் என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் இந்தியாவின் முதல் ரயில் சேவை நிறுவனமான ‘தி கிரேட் இந்தியன் பெனிசுலா ரயில்வே’ நிறுவப்பட்டது. இதற்காக அங்கு 1850ம் ஆண்டு ரயில் நிலையம் ஒன்றையும் நிறுவினர். அது போரிபந்தர் டெர்மினல் என்று அழைக்கப்பட்டது.
அதன் பின்னர் ரயில் சேவையின் வளர்ச்சியை ஒட்டி இங்கு பிரமாண்டமான ரயில் நிலையத்தை அமைக்க ஆங்கி லேய ஆட்சி முடிவு செய்தது. இதற்கான கட்டிடம் வடிவமைக்கும் பணி பிரெடரிக் வில்லியம்ஸ் ஸ்டீவன்ஸ் என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. அன்றைய காலகட்டத்தில் இதற்காக அவருக்கு ஆங்கில அரசு அளித்த சம்பளம் ரூ.16.14 லட்சம் ஆகும். இதற்காக வில்லியம் ஸ்டீவன்ஸ் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து போரி பந்தர் ரயில் நிலையத்தை அமைப்பதற்கான கட்டிட மாதிரிகளை ஆய்வு செய்தார்.பின்னர் இந்திய, இத்தாலி, கோதிக் கட்டிட கலைகளின் அடிப்படையில் இந்திய கலைஞர்களின் கைவண்ணத்தில் புதிய வடிவிலான இந்திய ரயில்வே நிலையம் அங்கு உருவாக்கப்பட்டது. இது மத்திய லண்டனில் அமைந்திருந்த பாங்கிராஸ் ரயில் நிலையத்தை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிலையம்தான் தற்போது
மும்பை ரயில் நிலையம்.
இந்த நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 1888ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது அதற்கு விக்டோரியா டெர்மினல் என்று பெயர் சூட்டப்பட்டது. இதுவே கிரேட் இந்தியன் பெனி்சுலா நிறுவனத்தின் தலைமையகமாகவும் செயல் பட்டது. ரயில் டிக்கெட் அச்சடிக்கும் பணிகளும் இங்கு நடைபெற்றன. ‘தி கிரேட் இந்தியன் பெனிசுலா ரயில்வே’ என்ற பெயா், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியன் ரயில்வே என்று பெயர் மாற்றப்பட்டது. கடந்த 1996ம் ஆண்டு தான் மகாராஷ்டிரா அரசு விக்டோரியா டெர்மினல் என்ற பெயரை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் என்று மாற்றியது. 2004ல் இந்த நிலையம் ஐநாவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலிலும் இடத்தை பிடித்து தனது பெருமையை தக்க வைத்துக்கொண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 42 ரயில்வே பிரிவுகள் காணப்பட்டன. 1951ம் ஆண்டு அவை அனைத்தும் தேசிய மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு தெற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே என்று பல பிரிவுகள் உருவாக்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து இன்று உலகிலேயே மிகப் பெரிய பயணிகள் ரயில் சேவை நிறுவனமாக இந்தியன் ரயில்வே உயர்ந்துள்ளது. தற்போது இந்தியன் ரயில்வேயில் ஆண்டு தோறும் சுமார் 500 கோடி மக்கள் பயணம் செய்கின் றனர். கடந்த 10 மாதங்களில் 90 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 16 லட்சம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர். இந்தியா முழுவதும் சுமார் 63 ஆயிரத்து 140 கிமீ நீளத்துக்கு ரயில்பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தியன் ரயில்வே சார்பில் நாள்தோறும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுகிறது.
1853ம் ஆண்டு, பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்தும் சத்தத்துடன் நீராவி இன்ஜினால் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னா் நீராவி இன்ஜின், டீசல் இன்ஜினாக உருமாற்றம் அடைந்தது.
தற்போது மின் தொடர் வண்டிகளாக மாறிவிட்டன. அதே போல் ஆரம்பத்தில் சுமார் 40 கிமீ வேகத்தில் சென்ற ரயில்கள் இன்றைக்கு மணிக்கு 100 கிமீக்கும் அதிகமான வேகத்தில் தடதடக்கின்றன. மேலும் வருங்காலத்தில் புல்லட் ரயில்கள், அதிவேக ரயில்கள் என கால மாற்றத்தின் காரணமாக மின்னல்வேகத்தில் செல்லும் ரயில்கள் இந்தியாவில் வரவிருக்கின்றன. கடந்த காலத்தில் ரயிலில் பயணம் செய்தால் உடல் முழுவதும் கருப்பாக அழுக்கு படியும். அந்தக்காலம் இப்போது மலையேறிவிட்டது. இன்றைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பெட்டிகளில் நமது அலங்காரம் கலையாமல் பயணிக்கும் வகையில் ரயில் பயணம் மாறியுள்ளது.
சென்னைக்கு ரயில் வந்தது
மும்பை-தானேவை தொடர்ந்து ஓராண்டுக்கு பிறகு 1854ம் ஆண்டு அவுரா-ஹூக்ளி இடையே முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மும்பையில் ரயில் பாதை தொடங்கப்பட்ட அதே ஆண்டில் சென்னை ராயபுரத்தில் ரயில் பாதை பணி தொடங்கப்பட்டது. 1853ம் ஆண்டு துவங்கிய இத்திட்டம் 1856ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போது ராயபுரத்தில் இருந்து ஆற்காடு அருகே உள்ள வாலாஜா வரை ரயில் சேவை இயக்கப்பட்டது. பின்னர் இது தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
நாடு விடுதலை பெற்ற பிறகு முதன்முதலாக தொடங்கப்பட்ட ரயில்வே பிரிவு தென்னக ரயில்வே ஆகும். இந்தியா வின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் செயல்பட்ட பல் வேறு ரயில் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து 1951ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தென்னக ரயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்

அதன் முக்கிய அம்சங்கள்
* கட்டணங்களை உயர்த்தாமல் மற்ற வழிகளில் வருவாய் ஈட்ட முயற்சி
* மோடியின் கனவை நனவாக்கும் வகையில் ரயில்வே துறை மேம்படுத்தப்படுகிறது
* அடித்த நிதியாண்டில் 1.80 000 கோடி வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்ட்டு உள்ளது.
* கடந்த ஆண்டை விட ரெயில்வே முதலீட்டை இரண்ட்டுமடங்கக்க திட்டம்
* 2016-2017 ரூ.1.21 லட்சம் கோடி மூலதன முதலீடாக இருக்கும்
* கடந்த ஆண்டில் அறிவிக்க பட்ட 139 திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றபட்டு உள்ளது.
* அடுத்த ஆண்ட்டில் 2,800 கீ. மீட்டர் ரெயில்பாதை அகலபாதையாக்க திட்டம்
* ஒரு நாளைக்கு 7 கி.மீ ரெயில் பாதை ஏற்படுத்த திட்டம
* ரெயில் பாதை மைப்பு மூலம் அதிக வேலைவாய்ப்ப ஏற்படுத்த இலக்கு
* ரெயில்களின் நேரம் தவறாமை 95% ஆக உயர்ந்துள்ளது
* எக்ஸ்பிரஸ் ரயில்கள் 50 கி.மீ, சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்கள் 80 கி.மீ. வேகத்திலும் இயக்கப்படுகின்றன
* ரயில்பாதை பணிகள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்
* டெல்லி – சென்னை உள்ளிட்ட முக்கிய சரக்கு ரயில்பாதை திட்டங்களின் செயலாக்கத்திற்கு முன்னுரிமை
* 2020 க்குள் அனைத்து ரயில் கிராசிங்குகளிலும் பணியாட்கள் நியமனம்
* 2016-17 ல் 1.21 லட்சம் கோடி முதலீடு
* 2020க்குள் ரயில்வே கால அட்டவணைப்படி குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்க தீவிர நடவடிக்கை
* 2 ஆயிரம் கிலோ மீட்டர் பாதை மின்மயமாக மாற்ற நடவடிக்கை
* பொருளாதார வளர்ச்சிக்கு ஊதிய உயர்வுக்குழு போன்றைவை ரயில்வே முன் உள்ள சவால்கள்
* 100 சதவீத வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும்
* மொத்த வருவாயில் சரக்கு கட்டணத்தின் பங்களிப்பு 60 சதவீதம்
* விஷன் 2020 கீழ் பல திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ரயில்வே மேம்பாட்டுக்கு 124 எம்.பிக்கள் நிதியளிக்க உறுதி.
* 40 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும்
* 2020 க்குப்பிறகு ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் இந்தியாவில் இருக்காது.
* திட்டங்கள் செயலாக்கத்திற்கு மாநில அரசுகளுடன் இணைந்த செயல்பாடு பெரும் மாற்றங்களை நிகழ்த்தும்
* பத்திரிகையாளர்கள் இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவின்போது சலுகைகள் பெறலாம்.
* தேர்வு செய்யப்பட்ட சில ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் பார் கோடு வசதி கொண்ட ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
* ரயில்வே பணியிடங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சலுகை வழங்கப்படும்.
* ஆஜ்மீர், அமிர்தசரஸ், கயா, மதுரா, நான்டெட், புரி, திருப்பதி, வாரணாசி, நாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்படும்.
* இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்.
* வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.
* இ-கேட்டரிங் சேவை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
* பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.
* குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.
* ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.
* மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கான கீழ்படுக்கை வசதி 50 சதவீதமாக அதிகரிப்பு
* முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.
* வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.
டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் வசதிக்காக:
1. பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
2. டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் வசதிக்காக நீண்ட தூரம் செல்லும் அந்தோதயா ரயில்கள் இயக்கப்படும்.
* 1780 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு
*


