32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>budget</span>

2931 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததன் பின்னணி இதுதான்! Exclusive

2931 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததன் பின்னணி இதுதான்!

தமிழகத்தில் உள்ள 2931 பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற செய்தி, அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கான பெரும் நிதி ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும், கள நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதன் அப்பட்டமான சான்றாக அமைந்துள்ளது. பள்ளிகள் மட்டுமல்லாது, பெரும்பாலான அரசு அலுவலகக் கட்டிடங்களிலேயே கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லாத அல்லது மிக மோசமான நிலையில் உள்ள அவலநிலை உண்மையே. அதிகாரிகளுக்கு மட்டும் சற்றேனும் மேம்பட்ட வசதிகள் இருக்கும் நிலையில், பொதுவான அலுவலர்கள் கேன் […]

June 30, 2025 admin
தமிழக பட்ஜெட் மார்ச் 14–ந் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்! Exclusive

தமிழக பட்ஜெட் மார்ச் 14–ந் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்!

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அன்றைய கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றார். சபாநாயகர் தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்-அமைச்சரின் பதில் உரையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2025-–2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் […]

February 18, 2025 admin
தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு! Exclusive

தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு!

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் வருமான வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி கிடையாது. மேலும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாத வருமானமாக ரூ.1 லட்சம் வரை பெறுபவர்கள் வருமான வரி செலுத்த […]

February 1, 2025 admin
ஒருவர் மட்டுமே பிரதமராக கனவு காண அனுமதி- ராகுல் பொளேர்! Exclusive

ஒருவர் மட்டுமே பிரதமராக கனவு காண அனுமதி- ராகுல் பொளேர்!

’’இந்தியாவில் ஏ1, ஏ2 தொழிலதிபர்கள் (அம்பானி, அதானி) மட்டுமே கோலோச்சுகின்றனர். விமான நிலையங்கள், தொலை தொடர்பு, ரயில்வே என அனைத்து திட்டங்கள், ஒப்பந்தங்களும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. நாட்டின் செல்வத்தில் பெரும் பகுதி அவர்களிடம் இருக்கிறது. அவையில் இல்லாதவர்களின் பெயர்களை குறிப்பிடக்கூடாது என்று அவைத் தலைவர் அறிவுறுத்தி உள்ளார். எனவே, அவர்களை ஏ1, ஏ2 என்று குறிப்பிடுகிறேன்’’ என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் மீதான […]

July 30, 2024 admin
பட்ஜெட் 2024 : முன்னுரிமை அம்சங்கள் & ஆந்திரா,பீகாருக்கு சிறப்பு திட்டங்கள்! Exclusive

பட்ஜெட் 2024 : முன்னுரிமை அம்சங்கள் & ஆந்திரா,பீகாருக்கு சிறப்பு திட்டங்கள்!

பிரதமர் மோடியின் 3வது முறை ஆட்சி அமர்ந்த பின்னர் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தார். நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்யும் 7 வது பட்ஜெட் இது ஆகும். இதன்மூலம் தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்யின் சாதனை முறியடிக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னதாக அவர் நிதி அமைச்சகம் சென்றார். பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஜனாதிபதி நிர்மலாவுக்கு இனிப்பு […]

July 23, 2024 admin
இந்திய பட்ஜெட் பற்றிய சுவையான தகவல்கள்! Exclusive

இந்திய பட்ஜெட் பற்றிய சுவையான தகவல்கள்!

பட்ஜெட் – பெயர்க் காரணம்; பிரெஞ்சு சொல்லான ‘Bougette’ என்கிற வார்த்தையிலிருந்து திரிந்து வந்ததுதான் ‘பட்ஜெட்’. பிரெஞ்சில் ‘பவ்கெட்’ என்றால் தோலால் செய்யப்பட்ட பர்ஸ் அல்லது பையைக் கூறிக்கும். ஆண்டின் வரவு செலவு குறித்த ஆவணங்களைத் தோலாலான பைகளில் கொண்டு செல்வதால் பட்ஜெட் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவின் முதல் பட்ஜெட்: கடந்த 1860ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஸ்காட்லாந்து பொருளாதார வல்லுநரும் அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் இந்தியாவில் பட்ஜெட்டை […]

July 23, 2024 admin
தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்  முக்கிய அம்சங்கள்! Exclusive

தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் மகளிர் உரிமைத் தொகை, கல்வி, இளைஞர் நலன், போக்குவரத்து துறை, சமூக நலத்துத்துறை, மருத்துவத்துறை, மெட்ரோ திட்டம் என பல்வேறு துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாகவும், தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது […]

February 19, 2024 admin
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் இதோ! Exclusive

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் இதோ!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.”கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பலதரப்பிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியன […]

March 20, 2023 admin
தமிழ்நாடு பட்ஜெட் : மார்ச் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்! Exclusive

தமிழ்நாடு பட்ஜெட் : மார்ச் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்!

நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுக்கும் என்றும் கூறினார். சென்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பட்ஜெட் தாக்கல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மார்ச் […]

February 27, 2023 admin
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முழு விபரம்! Exclusive

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முழு விபரம்!

வரும் ஏப்ரல் 6–ந்தேதி முதல் மே 10–ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டசபை கடந்த மார்ச் 18–ந்தேதி கூடியது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022–2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 19–ந்தேதி வேளாண் பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெற்றது. 24–ந்தேதியுடன் முதல் அமர்வு நிறைவு பெற்றதையடுத்து, தமிழக […]

March 30, 2022 admin
உடனடி செய்திகள்