என். எல். சி., யின் தந்தை தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்!
ராவ் பகதூர் தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்(T. M. Jambulingam Mudaliyar) என்பவர் ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டறிந்து, நெய்வேலி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைக்க காரணமாகவும், நிறுவனம் அமைய 620 ஏக்கர் விளைநிலத்தை கொடையாக கொடுத்தவரும் ஆவர்
ஜம்புலிங்க முதலியார் செய்த மக்கள் பணிகளில் சில :
நெல்லிக்குப்பம் பேரூராட்சி தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை.
புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட தனது சொந்த செலவில் முழு முனைப்புடன் ஈடுபட்டு அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்காக பாலத்தை கட்டி கொடுத்தார்.
சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க இவர் அரசிடம் பல வழியில் அணுகியபோது அரசு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தினமும் 50 நபர்கள் கடலூர் சேலம் பேருந்து போக்குவரத்தில் இருந்தால்தான் சேலம் கடலூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி விட்டது. அதனால் இவர் தனது தோட்டத்தில் வேலை செய்யும் 50 நபர்களை சொந்த செலவில் ஒரு வருடத்திற்கு தினமும் சேலம் கடலூர் பாதையில் பேருந்துகளில் பயணிக்க வைத்து சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை திட்டத்தை பெற்றுத்தந்தார்.
குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கைதாகி அசிஸ்ன்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்கம் முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார்.
தென் ஆற்காடு மாவட்ட படையாட்சி வன்னியர் சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி இந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார்.
இப்போது தலைப்பில் சொல்லப்பட்டுள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மேட்டருக்கு வருவோம் :
ஜம்புலிங்க முதலியார் தனக்குச் சொந்தமான நெய்வேலி கிராமத்து விவசாய நிலத்தில் தண்ணீருக்காகக் புதிய கிணறு தோண்டும்போது, கறுப்பு நிற திரவப்பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அதை அன்றைய ஆங்கிலேய அரசின் புவியியல்துறையின் கவனத்துக்கு அனுப்பிவைத்தார் ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. பின்பு இவரே தன் சொந்த செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு நிலக்கரி இருப்பதை கண்டுப்பிடித்தார்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், அப்போது முதலமைச்சராக இருந்த இராஜாஜியிடம் அணுகி இந்த நிலக்கரி இருப்பதை பற்றி விளக்கினார். இருப்பினும் அரசு கண்டுக்கொள்ளவில்லை. பின்பு காமராஜர் முதலமைச்சர் ஆனா பின்பு அவர்களை அணுகி அவரிடம் விளக்கிக் கூறியுள்ளார் பின்பு காமராஜர் மூலமாக அன்று பாரத பிரதமராக இருந்த நேருவை சந்தித்து அவரிடம் விளக்கத்தை தந்துள்ளார்.
இந்த நிறுவனம் தொடங்க அன்று 150 கோடி ரூபாயை தேவைப்பட்டதால் மத்திய அரசு இதற்க்கு உதவி செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இதனை அறிந்த ஜம்புலிங்கம் முதலியார் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் உருவாகத் தேவைப்படும் 620 ஏக்கர் நிலத்தை காமராஜர் தலைமையிலான மாநில அரசுக்கு கொடையாக கொடுக்கிறேன் என்று அறிவித்தார.காமராஜர் தலைமையிலான மாநில அரசு, மத்திய அரசின் உதவி இல்லாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைத்தது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) இந்த நிறுவனத்திற்கு தானமாக ஜம்புலிங்கம் முதலியார் கொடுத்த 620 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு 2,500 கோடி ரூபாய் ஆகும்.
இன்றைக்கு தென்னிந்தியாவிற்கு தேவைப்படும் மின்சாரம் 90 சதவீதம் அனல்மின் நிலையத்தில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது. இந்த தென்னிந்திய அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி அனைத்தும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இருந்து அனுப்பப்படுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் அனல் மின் நிலையம் 50,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இந்நிறுவனம் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
நினைவுகள்:
இவருக்கு நெய்வேலி குடியிருப்பில் முழு உருவ சிலை உள்ளது. இவர் பெயரில் நெய்வேலி குடியிருப்பில் ஓர் சாலை உள்ளது.
கிராமப்புற மக்களிடையே கல்வியறிவு பரவுவதில் ஜம்புலிங்கம் முதலியார் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் பல முக்கியமான பதவிகளை வகித்தார். இவரது சேவைகளை பாராட்டுவதற்காக பிரிட்டிஷ் அரசு ஜூன் 1934 இல் ஜம்பிலிங்கம் முதலியாருக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கியது.
இவர் கொடுத்த கொடுத்த இடத்தில் கட்டப்பட்ட நெல்லிக்குப்பம் பூங்காவுக்கு ஜம்புலிங்கம் பூங்கா என்று பெயர் உள்ளது. இவரின் பொருள் உதவியால் கட்டப்பட்ட “நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு” சாலை ஜம்புலிங்கம் சாலை என்று அழைக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசுக்கு தானமாக கொடுத்த ஜம்புலிங்க முதலியார்க்கு அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்று விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தி. மா. ஜம்புலிங்கம் முதலியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை