பேஸ்புக் என்பது பப்ளிக் டாய்லெட் -தானே?

பேஸ்புக் என்பது பப்ளிக் டாய்லெட் -தானே?

பேஸ்புக்-கில் எழுதிய சில விஷயங்களை அவரவர் பேரோடு சில பல ஆன்லைன் & நாளேடுகள் பப்ளிஷ் செய்வது குறித்து ஒரு சாரார் ஏதேதோ சொல்லி வருகிறார்கள்.. இந்த பேஸ்புக் என்பது பப்ளிக் டாய்லெட் என்பதை அந்த சிலர் மறந்து விடுகிறார்கள் என்பதுதான் சோகம்.. வருவாய்க்கான பிழைப்புக்கு இடைவெளி கிடைக்கும் நேரத்தில் பேஸ்புக் பக்கம் எட்டிப் பார்க்கும் இவர்கள் Fun-ஆக ஆய் போகும் போகும் போது எதையோ எழுதி இருப்பார்கள்..

அதை அடுத்து ஆய் போக வரும் சில எக்ஸ்கியூட்வ்-கள் வாய்ப்புக் கிடைத்தால் மேற்படி சிந்தனை பலருக்கும் போய் சேர தங்கள் தளத்தில் மேற்படியார் நோமோடு பகிர்கிறார்கள்.. இதையே ஏகப்பட்ட பேர் ( ஐ மீன் முன்னர் ஆய் போனோர் நேமை மட்டும் எடிட் செய்து சிலரும், தன் பெயரைப் போட்டு பலரும் ) அதே டாய்லெட்டில் பகிர்வோருமுண்டு,,

இச்சுழலில் எதை யார் உண்மையில் எழுதினார் என்றெல்லாம் கண்டறிந்து அவரின் இன்பாக்ஸ் கதவைத் தட்டி பர்மிசன் வாங்குவதெல்லாம் வெட்டி வேலையான்களின் பாணி.. நீங்க யூஸ் பண்ணிட்டு வெளியேறிய டாய்லெட்டுக்குள் நுழையும் நான் என் வேலை முடியும் முன்பு என் கண்ணில் படும் சில பல பகிர்தல் வேலை செய்ததை காப்பிரைட் ஆக்ட் பிரகாரம் தப்பு என்றும்,பர்மிசன் இல்லாம அதுலே, இதுலே எதிலேயோ ஷேர் செஞ்சதா கொதிக்கறதெல்லாம் பைல்ஸ் கம்ப்ளையண்ட்வாசிகள் கதறலைப் போலிருக்கிறது.

திரும்பவும் சொல்வதானால் உங்கள் கிறுக்கல் பொது கழிவறை எனப்படும் ஃபேஸ்புக்கில் இருந்து எடுக்கப் பட்டதாக்கும். அங்கு உங்களை போன்றவர்கள் வந்து போனால் கழிவறையில் எதை செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்வதை விட்டு விட்டு இராம நவமியின் இன்னொரு காரணம் தெரியுமா? என்பதை அலசி ஆராய வேண்டாம்

அதே சமயம் தமிழ் எழுத்துகளை அல்லது தங்கள் படைப்புகளை எம்புட்டு வார்த்தை என்றெல்லாம கவுண்ட் செய்து கணக்கு வழக்கெல்லாம் செய்து பிழைபோட்டும் ரைட்டர்கள் சிலர் தங்கள் பெயரோடு பகிரும் பதிவுகளை ஆதரிக்கும் போக்கை பார்க்கலாம்

அது போல் எல்லா எழுத்தாளர்களும் கொஞ்சம் மாறுவதை விட்டு விட்டு ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்வதை எல்லாம் காப்பி ரைட் & பர்மிசன் என்றெல்லாம் டெக்னிக்கலாக புலம்புவோர் தங்களுக்கான தளத்தில் மட்டும் எழுதி எழுதி. எழுதி எழுதி.திருப்தி பட்டுக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என்பது என் கருத்து .

error: Content is protected !!