June 7, 2023

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ!

கொரோனா தொற்றில் இருந்து காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

காலை ஒரு வேளை கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்வது,

அவ்வப்போது சூடான தண்ணீர் குடிப்பது,

உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை மாலை இரு வேளையும் வாய் கொப்பளிப்பது,

துளசி அல்லது வேப்பிலையில் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்த நீரில் நீராவி பிடிப்பது,

மஞ்சள் கலந்த பாலில் மிளகு பொடி கலந்து காலை மாலை இரு வேளையும் பருகுதல் உள்ளிட்டவையால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி மூலிகை டீ, மற்றும் வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் இவற்றுள் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தலாம்.

தினமும் 15 முதல் 20 நிமிடம் காலை 7.30 மணிக்குள் அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள்ளாக சூரியக் குளியல் எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.