32°C
விளம்பரம்
Advertisement

வருகிற 31-க்கு பின்னர் வருமான வரி கணக்கை எந்த வகையிலும் தாக்கல் செய்யமுடியாது!

admin சேலம் Published: March 25, 2018 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நம் நாட்டின் வருமானவரித் துறை சட்டத்தின் படி, அனைத்து நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட கூட்டு நிறுவனங்கள் சங்கங்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தனிநபர் மற்றும் கூட்டு குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் இருந்தால் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களாக இருக்கும் பட்சத்தில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் மட்டும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித் துறை கூறியுள்ளது.

மேலும், பெரும் தொகையை வங்கிகளில் முதலீடு செய்திருந்தால் அதனைத் தவறாமல் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினாலும் தவறான தகவல்களுடன் தாக்கல் செய்தாலும் தண்டனை மற்றும் அபராதத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் கணக்குகளை தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில், வருமான வரி செலுத்தி அதேசமயம், 2016-17 மற்றும் 2017-18-ம் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்களுக்கு, அதை நினைவூட்டும் வகையில், வருமான வரித்துறை கடிதங்களை அனுப்பி இருந்தது.

இந்த கடிதங்களை பெற்ற வருமான வரி செலுத்தியோர், வருமான வரித்துறையிடம் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகளை கோரியும் பதில் அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்வதற்கு வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். வருமான வரி செலுத்தியவர்கள் குறிப்பாக, சுய வேலைவாய்ப்பு அல்லது ஊதியம், ஓய்வூதியம் மூலம் வருமானம் பெறுபவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதை தூண்டும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயகார் பவன் அலுவலகம், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். கட்டிடம் மற்றும் மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் செயல்பட்டு வரும் ஆயகார் சேவை மையங்களில் வருகிற 26-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி வரை காலை 9.15 மணி முதல், மாலை மணி 5.45 வரை வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம்.

வருமான வரி கணக்குகளை வருகிற 31-ந்தேதிக்கு பின்னர் எந்த வகையிலும் தாக்கல் செய்யமுடியாது. மேலும் விவரங்கள் மற்றும் விளக்கங்களை வருமான வரித்துறையின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தை 044-28338014, 044-28338314 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அடிசினல் ரிப்போர்ட்:

இந்தியாவில், வருமான வரி தாக்கல் செய்தோருக்கு வருமான வரி துறை திரும்பி செலுத்த வேண்டிய தொகை, அவர்களிடம் வந்து சேர்வதற்கு பல நேரங்களில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கான முக்கியமான சில காரணங்களை வரிமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1. தாமதமான தாக்கல்:

உங்களுக்கு உரிய நேரத்தில் உங்களுடைய தொகை வந்து சேர வேண்டும் என்று நினைத்தால், அதற்கு நீங்கள் முதலில் உரிய நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்பு அவர்கள் அளிக்கும் கால இடைவெளிக்குள் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

2.தவறான தரவு:

நீங்கள் வரிமான அதிகாரிகளிடம் அளிக்கும் தகவல்கள் துல்லியமாக இருத்தல் வேண்டும். சிலர், அவர்களின் ஆதார் கார்டில் துவங்கி, அடிப்படை ஆவணங்கள் என அனைத்து தரவுகளின் விவரங்களையும் சரியான நேரத்தில் பதிவு செய்யாமல் இருப்பது மிகவும் தவறானது ஆகும்.

3. பொருத்தமற்ற டிடிஎஸ்:

ஃபார்ம் 16ல் நீங்கள் பதிவிடும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருத்தல் வேண்டும். முக்கியமாக உங்களின் பிஎஃப் தொகை பிடித்தம், கணக்கு எண், ஆகியவற்றை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்.

4. நேரடி சோதனை:

நீங்கள் அளித்திருக்கும் தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து தகவல்களை உறுதி செய்வார்கள். அந்த சமயத்தில் உங்களின் அலட்சியமும், அல்லது தவறான முகவரி என்று தெரிந்தால், உங்களில் அப்ளிக்கேஷன் கேன்சல் ஆக அதிகமான வாய்ப்புகள் உண்டு.

மேலே கூறப்பட்டுள்ளது போல பல்வேறு காரணங்களால், வருமான வரித்துறையின் ரீஃபண்ட் தாமதம் ஆக வாய்ப்புகள் உண்டு. சமீபத்தில் நடத்திய ஆய்வில், 447 நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படும் வரி பணத்தை நிறுவனங்கள் அரசிடம் அளிக்காமல் தனது பிற வர்த்தகத்தில் முதலீடு செய்து வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது தனி ரிப்போர்ட்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்