உலகில் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள்!

உலகில் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள்!

உலகளவில் காற்று மாசுபாட்டில் முன்னணியில் உள்ள 15 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவன அறிக்கையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியான நிலையில் உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ ஐகியூஏர் விஷுவல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக நகரம் எதுவும் இடம் பெறவில்லை என்பது ஆறுதலுக்குரிய விஷயமாகும்

உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஐ ஐகியூஏர் விஷுவல் நிறுவனம், ‘உலக காற்றின் தர அறிக்கை, 2020’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உலகில் உள்ள நாடுகளில் உள்ள 106 முக்கிய நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ததில், மிகவும் மாசடைந்த நகரங்களின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதிலும் உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 22 இடங்கள் இந்தியாவில் உள்ளன. அதிக மாசடைந்த நகரங்களில் சீனாவில் சின்ஜியாங் மற்றும் ஒன்பது இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்று அந்த அறிக்கை கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரங்களில் 10 வது மாசுபட்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி திகழ்கிறது. 2019 முதல் 2020 வரை தில்லியின் காற்றின் தரம் ஏறக்குறைய 15 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக காசியாபாத் உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாசடைந்த நகரங்களின் பட்டியலில், காசிதாபாத், புலந்த்சஹார், பிஸ்ராக் ஜலாபூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னௌ, மீரத், ஆக்ரா மற்றும் உத்தரப்பிரேசத்தில் முசாபர் நகர், ராஜஸ்தானில் பிவாரி, பரிதாபாத், ஜிந்த், ஹிஸார், ஃபதேபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனா நகர், ஹரியானாவில் ரோஹ்டக் மற்றும் தாருஹேரா, பிகாரில் முசாபர்பூர் ஆகிய நகங்கள் இடம் பெற்றுள்ளன.

மனித செயல்பாடுகளால் 2021 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு அதிகரித்து இருப்பதை மீண்டும் காண முடிகிறது என்று ஐ ஐகியூஏர் விஷுவல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பிராங்க் ஹேம்ஸ் கூறியுள்ளார். இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எந்த நகரமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts

error: Content is protected !!