‘வில் அம்பு’ திரைப்படத்தின் ஆல்பம் !
‘வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனரான சுசீந்திரன் அதன்பின்னர் நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகி யுள்ள ‘வில் அம்பு’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி யுள்ளது. இந்த படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி யுடன் கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஸ்ரீ, ஹரிஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நவீன் இசையமைத்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்
இதனிடையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், “நான் இப்படத்தின் கதையை எழுதும் போது புதியதோர் கதையை எழுத வேண்டும் என்று யோசித்தேன் . அப்படி யோசிக்கும் போது எல்லா கதைகளும் தமிழ் சினிமாவில் வந்த கதைகளாகவே இருந்தன. பின் னர் ஏதாவது புதுமையாக இருக்க வேண்டுமே ?? ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாக கையாள லாமா ?? அல்லது வேறு ஏதாவது புதுமையாக செய்யலாமா என்று யோசித்த போது. திரைக் கதையை புதுமையாக அமைக்கலாம் என்று முடிவு செய்து. புதிய கோணத்தில் எழுத ஆரம்பித்தேன். எழுதும் போதே இது இரண்டு நாயகர்கள் கதை என்று முடிவு செய்துதான் எழுத ஆரம்பித்தேன்.
பொதுவா, இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்னா இரண்டு பேருக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கும். ஒன்று இரண்டு நாயகர்களும் ஒரே பெண்ணை காதலிப்பார்கள் அல்லது படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரும் சந்திப்பார்கள் மோதல் வரும் இல்லையென்றால் படத்தின் இறுதியில் இருவரும் ஒரு வரை ஒருவர் சந்திப்பார்கள். ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் படத்தின் இரண்டு கதாநாயகர்களும் ஒரு காட்சியில் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து பேசமாட்டார்கள். ஆனால் கதை இவர்களை சுற்றியே நகரும்.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான ஹீரோக்கள் ஹரீஷ் கல்யாண், இரண்டு பேரும் ஒருத்தர் வாழ்க்கையில் ஒருத்தர் அவங்களை அறியாமல் வந்துக்கிட்டே இருப்பாங்க. கடைசி வரைக்கும் அவங்க சந்திக்காமல், ஒரே வாழ்க்கையில் சம்பந்தப்படுவாங்க. ஆடியன்ஸ்க்கு மட்டும்தான் என்ன நடக்கும்னு தெரியும். ஹீரோக்களுக்குத் தெரியாது. நாம் என்ன நினைக்கிறோம், எப்படி இயங்குகிறோம் என்பதெல்லாம் தலைவிதின்னு சொல்வோம்.
இன்னிக்கும் நமக்கு ஒரு நல்லது, கெட்டது நடந்தா அது இன்னொரு மனிதனால் மட்டுமே நடக்கும். நம்ம லைஃப் டிசைன் நம்மால் போடப்பட்டதல்ல. புதுசான திரைக்கதையிலும், ஹரீஷ்,கல்யாண் போன்ற இரண்டு இளைஞர்களின் கடின உழைப்பிலும் படம் நல்லா வந்திருக்கு. படம் கடைசி ரசிகன் வரைக்கும் போய்ச் சேரணும்ங்கிறதுதான் என் நம்பிக்கை. சேரும்!’’ என்றார்

















