சியாச்சினில் மீட்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் சீரியஸ் கண்டிசன்

சியாச்சினில் மீட்கப்பட்ட இந்திய  ராணுவ வீரர் சீரியஸ் கண்டிசன்

இந்திய எல்லையில் உள்ள சியாச்சின் பனிப் பகுதியில் கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட பனிச் சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டர். அனைவரும் இறந்துவிட்டதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் 6 நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 25 அடி ஆழத்துக்கு கீழ் அவர் புதையுண்டு இருந்த அவரை ராணுவ மீட்புக் குழு மீட்டுள்ளது. லேன்ஸ் நாயக் ஹனமந்தப்பாவை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற போராடி வருகின்றனர். அவர் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அடுத்த 24-48 மணி நேரத்துக்கு கடும் சிகிச்சைகள் அளித்த பிறகே அவரது நிலவரத்தில் முன்னேற்றம் உள்ளதா என்பது தெரியவரும் என்று தெரிய வருகிறது
indian army feb 9
உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் சிகரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கிருந்த இந்திய ராணுவ காவல்சாவடி பனியில் புதைந்தது. அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனியில் புதைந்தனர்.அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் ஒன்பது பேரின் பிரேதங்களை மீட்டுள்ள நிலை யில், நேற்று ஒரு இடத்தில் பனிக்கட்டிகளை தோண்டியபோது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனு மந்தப்பா என்ற வீரர் வீரர் மட்டும் 25 அடி பனிக் குவியலுக்குள் புதைந்தபடி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். மைனஸ் 40 டிகிரி குளிரில் 6 நாட்களாக சிக்கியிருந்தும் அவர் உயிரோடு இருந்தது மிகவும் அதிசயம்.

அவரை மீட்பு படையினர் உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கோமா நிலையில் உயிருக்கு போராடி வரும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப் படுகிறது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்களும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

அவரது சுவாசப்பாதை மற்றும் நுரையீரலை பாதுகாக்கும் வகையில் வெண்டிலேட்டர் பொருத்தப் பட்டுள்ளது. அவரது உடலில் ரத்த அழுத்தம், நீர்ச்சத்து மிகவும் குறைந்துவிட்டது. சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்து கொண்டு வருகிறது. எனவே, அவர் மிகவும் கவலைக் கிடமாகவே உள்ளார். எனவே, அடுத்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குப் பிறகே எதையும் உறுதியாகக் கூற முடியும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts