யானை மேல் குதிரை சவாரி! நியூ ஸ்டில்ஸ்
கருப்பையா முருகன் என்பவர் தயாரித்து இயக்கும் ‘யானை மேல் குதிரை சவாரி’ என்ற படத்தில்தான் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ரொமான்ஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். லொள்ளு சபா புகழ் சாமிநாதனும், நான் கடவுள் ராஜேந்திரனும் ஒரே பெண்ணை காதலிப்பதாகவும், அதில் ராஜேந்திரன் வெற்றி பெறுவதும் போன்றும் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படத்தில் முதன்முதலாக ரொமான்ஸ் கேரக்டரில் நடிப்பது தனக்கு புதிய அனுபவமாக இருந்ததாக ராஜேந் திரன் தெரிவித்துள்ளார்.என்னால் முடிந்த அளவு ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதாக கூறிய ராஜேந் திரன், இந்த கேரக்டர் நன்றாக இருக்க இயக்குனர் செய்த முயற்சிகளே காரணம் என்றும் கூறினார். ரொமான்ஸ் கேரக்டரில் இந்த படத்தில் நான் நடித்திருந்தாலும், இந்த படத்தின் ஹீரோ நான் இல்லை’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.











