தேர்தல் விதி மீறல்: 64 ,000 வழக்குகள்: தண்டனை 250 பேருக்கு மட்டுமே – 2011 அசெம்பிளி ரிசலட்!

தேர்தல் விதி மீறல்: 64 ,000 வழக்குகள்:  தண்டனை 250 பேருக்கு மட்டுமே – 2011 அசெம்பிளி ரிசலட்!

சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது என்று கூறி அவற்றை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல் படுத்தி வருகிறது. விதிமுறைகளை மீறி சுவர் விளம் பரம் செய்தது, போஸ்டர் ஒட்டியது, பேனர் கட்டியது, பணப் பட்டுவாடா, பிரச்சாரத்தில் விதிமீறல், வேட்பு மனு தாக்கலின் போது அதிக கூட்டத்தினர் வருவது என பல வகையான விதி மீறல் புகார்களின் மீது காவல் நிலையங் களில் வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன.
tn assembly mar 8
இதே போல், கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அரசி யல் கட்சிகள், கட்சியினர் மீது மொத்தம் 64,250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேர்தல் முடிந்த பின்னர் இந்த வழக்கு கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முடக்கி வைப்பதை போலீஸார் பல காலமாக பின்பற்றி வரு கின்றனர். இந்த வழக்குகளை அரசுதான் நடத்த வேண்டும். ஆனால், ஆட்சி அமைக்கும் கட்சியினர் மீதும் அதிக வழக்கு இருக்கும் என்பதால், வழக்குகளை நடத்துவதில் எந்த அரசும் ஆர்வம் காட்டுவதில்லை.

கடந்த தேர்தலில் பதிவு செய்யப் பட்ட 62 ஆயிரம் வழக்குகளில், சுமார் 45 ஆயிரம் வழக்குகள் விளம்பரங்கள், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பானவை. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சுமார் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் தேர்தல் விதி மீறல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கடந்த சில ஆண்டுகளில் சுமார் 250 பேருக்கு மட்டுமே தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

மேலும் தேர்தலின்போது ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள், இலவசங்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படும். 2011 சட்டப்பேரவை தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.200 கோடிக்கும் அதிக மான பணம் பறிமுதல் செய்யட்டது.அதில் பலர் ஆவணங்களைக் காட்டி பணத்தை திரும்ப பெற்றுச் சென்றனர். ஆனால் ரூ.48 கோடிக்கு உரிமை கொண்டாடி இன்று வரை யாரும் வராததால் அது அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.