மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி எனற் தீர்ப்பையடுத்து ஜெயிலில் அடைப்பு!

மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி எனற் தீர்ப்பையடுத்து ஜெயிலில் அடைப்பு!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 45 பேருமே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்..
sep 30 -Lalu Prasad Yadav_
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 45 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுமார் 17 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்று நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

1990-களில், பிகார் மாநிலத்தில் போலி ரசீதுகள் தாக்கல் செய்யப்பட்டு ரூ. 37.7 கோடி அளவுக்கு கால்நடை தீவன ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.அது தொடர்பாக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் மாநில முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ரா, அக்கட்சியின் எம்பி ஜெதீஸ் சர்மா உள்பட 45 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.தண்டனை விபரங்கள் வரும் 3 ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

“குற்ற வழக்குகளில் தண்டனைப் பெறும் அரசியல்வாதிகளின் பதவி உடனடியாக பறிக்கப்பட வேண்டும்’ என்று கடந்த ஜூலை 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், லாலு பிரசாத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாதவாறு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது குறிப்பிடத்தக்கது.

Fodder scam: Lalu Prasad Yadav, 44 others convicted; sentencing set for October 3
***************************************************************
A CBI designated court delivered its verdict in a fodder scam case involving Rashtriya Janata Dal (RJD) chief Lalu Prasad Yadav.The court found Lalu guilty. Besides the RJD chief 44 other persons were also found guilty in one of the five fodder scam cases.A lawyer announced that the quantum of punishment will be announced on October 3 and is set to be more than 4 years.

error: Content is protected !!