மருத்துவர்கள் உதவி இல்லாத சூழலில் குழந்தை பிறப்பு! யூ டியூப்பில் கலக்கும் ரியாலிட்டி ஷோ!

மருத்துவர்கள் உதவி இல்லாத சூழலில் குழந்தை பிறப்பு! யூ டியூப்பில் கலக்கும்  ரியாலிட்டி ஷோ!

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் எனக்கு சிசேரியன்தான் ஆச்சு என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. அந்தக் காலத்தைப் போல பிரசவ வலி எடுத்து, பிரசவிக்கும் வேதனையை அனுபவித்து, மறு பிறவி எடுத்து, கடும் போராட்டத்துக்குப் பின்னர் பெற்றெடுத்த குழந்தையின் முகம் பார்த்து பட்ட வேதனையையெல்லாம் அப்படியே மறந்து பூரிப்புடன் மகி்ழ்ச்சிப் பெருக்கில் அயர்ந்து போகும் பாக்கியம் நிறையப் பெண்களுக்குக் கிடைகப்பதில்லை. அதற்குக் காரணம், பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியன் எனப்படும் அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறுவதுதான்.அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் சுகப் பிரசவமே நடைபெறுகிறது. பிரச்சினை என்று வந்தால் மட்டுமே அங்கு சிசேரியனுக்குப் போகிறார்கள். ஆனால் 99 சதவீத தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன்தான் கடைப்பிடிக்கப்படுகிறது.இருப்பினும் இயற்கையான அதாவது சுகப் பிரசவமே நல்லது என்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் இயற்கை சூழ்ந்த காட்டு பகுதியில் மருத்துவர்கள் உதவி இன்றி பெண்கள் குழந்தை பெற்று கொள்வது குறித்து புதிய தொடர் ஒன்றை படமாக்கியுள்ளனர். இந்த படம் யூ டியூபில் 2 கோடி பேரால் பார்க்கப்பட்டு உள்ளது. பார்ன் இன் தி வைல்ட் என்ற இந்த தொடரில் கர்ப்பிணிகள் அடர் வன பகுதியில் தனியாக விடப்படுகின்றனர்.
birth nature
அவர்களை சுற்றி இயற்கை சூழல் நிறைந்த பகுதி இருக்கும். ஆனால் அவர்களுக்கு உதவி செய்வதற்கு என மருத்துவர்கள் யாரும் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் குழந்தை மற்றும் தாய் பாதிப்பிற்கு ஆளாகும் அபாயம உள்ளது என கருத்து பரவியது.

எனினும் நிகழ்ச்சியை நடத்தும் அதிகாரியான எலி லெஹ்ரர் கூறுகையில், தாயும், குழந்தையும் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். நாங்கள் ஒரு குழுவாக அவர்களை கண்காணித்து வருவோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். எனினும் இதுபோன்ற தொடர்களால் ஆபத்தான கலாசாரம் பரவும் அபாயம் உள்ளது என்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வீடியோ லிங்க்:https://www.youtube.com/watch?v=DD2HJgrTA6c

Related Posts