ஜார்க்கண்ட் சிறுமியின் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு!

ஜார்க்கண்ட் சிறுமியின் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு!

வேலூரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமியின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
nigw cgild
ஜார்க்கண்ட் மாநிலம் கிரீடி மாவட்டம் மகப்பூரை சேர்ந்த இந்திரஜித் முகர்ஜி என்பவரின் மகள் பிரியங்கா (13). வேலூரில் தனது இளைய மகள் சிகிச்சைக்காக வந்திருந்த இந்திரஜித் தனது மூத்த மகள் பிரியங்காவையும் அழைத்து வந்திருந்தார். இங்குள்ள ஒரு விடுதியில் அவர்கள் தங்கி இருக்கும் போது அங்குள்ள உறவினர் அமீத், அவரது மனைவி சீமா ஆகியோரை சந்தித்தனர்.

கடந்த 2ஆம் தேதி அமீத், சீமா ஆகியோர் பிரியங்காவை உடன் அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றனர். மாலை 6 மணி அளவில் விடுதிக்கு திரும்பியபோது திடீரென பலத்த மழை பெய்தது. விடுதி அருகே பேரி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென அங்கிருந்த சாக்கடை கால்வாயில் சிறுமி பிரியங்கா தவறி விழுந்தாள்.

அந்த கால்வாயில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சிறுமி பிரியங்கா தண்ணீருக்குள் சிக்கியவாறு கைகளை தூக்கியவாறு உயிருக்கு போராடினாள். அவளை, அமீத் காப்பாற்ற முயன்றார். ஆனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பிரியங்கா மழைநீரில் அடித்து செல்லப்பட்டாள்.இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்புத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் கால்வாயில் மேலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. மழையால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு கால்வாய் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டு சிறுமியை தேடும் பணி நடந்தது. மூன்று நாளாக முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இந்தநிலையில், கலெக்டர் அலுவலகம் எதிரே இன்று காலை 11 மணிக்கு சிறுமி பிரியங்காவின் உடல் மீட்கப்பட்டது. 4 நாட்கள் ஆகிவிட்டதால் சிறுமியின் உடல் உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்களை சிறுமியின் உடலை வேலூரிலேயே அடக்கம் செய்தனர்.

Related Posts