பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் வேஸ்ட்- காங்கிரஸ் கருத்து!
”பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் முதன் முறையாக உரையாற்றினார். அவர் உரையாற்றும் போது அந்த சபையில் 3–ல் 2 பங்கு பகுதி காலியாக இருந்தது. இதற்கு பின்னணியில் நிச்சயமாக ஒரு கவலையளிக்கும் விஷயம் இருக்க வேண்டும். இதுவரை அமெரிக்காவுக்கு சென்றுள்ள அனைத்து இந்திய பிரதமர்களுக்கும், அங்கு பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றும் கவுரவம் அளிக்கப்பட்டது. ஆனால் மோடிக்கு இந்த கவுரவம் வழங்கப்படவில்லை, ஏன்?”என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

5 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம், மடிசன் சதுக்க நிகழ்வுகள், ஒபாமாவுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று நாடு திரும்பியுள்ளார் இந்த நிலையில்தான் மோடியின் அமெரிக்க பயணம் வேஸ்ட் காங்கிரஸ் குறைகூறியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான ஆனந்த் சர்மா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம்,”பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் முதன் முறையாக உரையாற்றினார். அவர் உரையாற்றும் போது அந்த சபையில் 3–ல் 2 பங்கு பகுதி காலியாக இருந்தது. இதற்கு பின்னணியில் நிச்சயமாக ஒரு கவலையளிக்கும் விஷயம் இருக்க வேண்டும்.மடிசன் சதுக்க உரை உள்பட அமெரிக்காவில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு, எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. அங்கு நிறைய தலைவர்கள் இருந்தனர். மடிசன் சதுக்கத்தில் கூடிய மக்கள் கூட்டத்துக்கான பலன்களை தனது செயல்பாடுகள் மூலம், நடிகர்களுக்கும், பாடகர்களுக்கும் அவர் வழங்கி விட்டார்.
அமெரிக்காவில் மோடியின் உரைகளை பார்க்கும் போது, அவர் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றிருக்கிறாரோ? என சந்தேகம் ஏற்படுகிறது. அல்லது அங்கு அவருக்கு திடீரென தனது தொகுதியான வாரணாசி நினைவுக்கு வந்ததோ? எனவும் தோன்றுகிறது. அவர் இன்னும் பிரசார மனநிலையிலேயே இருக்கிறார்.இதுவரை அமெரிக்காவுக்கு சென்றுள்ள அனைத்து இந்திய பிரதமர்களுக்கும், அங்கு பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றும் கவுரவம் அளிக்கப்பட்டது. ஆனால் மோடிக்கு இந்த கவுரவம் வழங்கப்படவில்லை, ஏன்?
வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் முந்தைய அரசுகளை சிறுமைப்படுத்தியிருப்பதன் மூலம், பிரதமர் பதவியின் கண்ணியத்தை அவர் குலைத்து விட்டார். அவரது அமெரிக்க பயணத்தின் மூலம் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
”என்று ஆனந்த் சர்மா தெரிவித்தார்ர்.


