பிரதமர் ஆவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை! – மோடி ஓப்பன் டாக்! வீடியோ

பிரதமர் ஆவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை! – மோடி ஓப்பன் டாக்! வீடியோ

”சிறு வயதில் பிரதமர் ஆவீர்கள் என்று நினைத்தீர்களா? என்று கேட்டால்,”பிரதமர், அமைச்சர் என்பது பற்றி நான் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். ஆனால், பிரதமர் ஆவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. கனவு காண்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அது பலிக்க வேண்டும் என்றால் அதற்காக நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.பொதுவாகவே குழந்தைகளை அவர்களது பெற்றோர் பொறியாளராகுங்கள், மருத்துவர் ஆகவேண்டும் என்று கூறுகிறார்களே தவிர, முதல்வர் ஆக வேண்டும் என்றோ, பிரதமர் ஆக வேண்டும் என்றோ கூறுவதில்லை.எதுவாக ஆக வேண்டும் என்று விரும்பினாலும் அதை அடைய முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து எதையாவது செய்து கொண்டே இருங்கள். எதை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைவதால் உங்களுக்கு சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிச்சயம் கிடைக்கும்”என்று பள்ளி மாணவர்களிடம் பிரதமர் மோடி தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.
modi teachersday-1ab
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக தனது ஆசிரியர் தின விழா சிறைப்புரையை வீடியோ காண்பெரன்சிங் மூலம் ஆற்றினார். இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, உற்சாகமாக பல்வேறு பிரதமர் மோடியிடம் கேள்விகளை கேட்டனர். இவை அனைத்துற்க்கும் மோடி பதிலளித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில்,ஒரு மாணவி , குஜராத்தில் உங்கள் வாழ்க்கையும், டில்லிக்கு பிரதமராக வந்திருப்பதால் உங்கள் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது பற்றி  எப்படி உணர்கிறீர்கள்?என்று கேட்டார்

அதற்கு பிரதமர் அளித்த பதிலில், தில்லியில் இருப்பதற்கும், குஜராத்தில் வாழ்ந்ததற்கும் மிகப்பெரிய மாற்றத்தை நான் உணரவில்லை. தில்லிக்கு வந்து வீடு, அங்கிருந்து அலுவலகம் என்று தான் சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் டில்லியை சுற்றிப் பார்க்கக் கூட இல்லை என்று சிரித்தபடி பதில் அளித்தார்.

ஒரு மாணவர் எழுந்து, நான் பிரதமர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பினார். அப்போது அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

அதற்கு சிரித்தபடியே பதில் அளித்த மோடி, 2024ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு தயாராகு. அதுவரை எனது பதவிக்கு ஆபத்தில்லை என்று கூறினார்.அதே சமயம், உங்களில் யார் பிரதமராக ஆனாலும், பதவியேற்கும் போது உங்கள் பதவியேற்பு விழாவுக்கு என்னையும் நிச்சயமாக அழைக்க வேண்டும் என்று கூறினார்.
modi teachersday-2
அடுத்து ஒரு மாணவர் எழுந்து…..பள்ளியில் மாணவர்களை பார்த்ததும் திறமையானவர்களா, திறமையற்றவர்களா என்று எப்படி தீர்மானிப்பீர்கள்? நீங்கள் ஆசிரியராக இருந்தால் எப்படி வழிநடத்துவீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

உடனே பிரதமர் மோடி….இது நல்ல கேள்வி என்றவர் தொடர்ந்த பதிலில்,”ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் இருந்தால், ஆசிரியர் 30 மாணவர்களையும் தனித்தனியாக கவனிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை எப்படி நடத்துவீர்களோ……அப்படி பள்ளியில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் வழி நடத்த வேண்டும். தனக்கு விருப்பமான குழந்தைகளை மட்டும் கவனிப்பது.. மற்ற குழந்தைகளை கண்டுக்கொள்ளாமல் விடுவது என்று இருக்கக் கூடாது. நன்றாக படிக்கும் குழந்தைகளைச் சிறப்பாக கவனிப்பதும் மற்ற குழந்தைகளை வீட்டில் உள்ள பெற்றோர்கள் கவனித்து கொள்வார்கள் என்று விட்டுவிடுவதும் ஆசிரியர்கள் செய்யக் கூடாது. ஒவ்வொரு குழந்தைகளிடத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.நான் ஆசிரியராக இருந்தால் எல்லா குழந்தைகளையும் சரிசமமாக நடத்துவேன்” என்றார்

எங்களுடன் பேசுவதால் உங்களுக்கு லாபம் என்ன? என்று மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, எல்லாமே லாபத்தை நோக்கிய விஷயம் இல்லை. நாட்டு மக்கள் டி.வி.யில் எங்களது முகத்தை பார்த்து மிகவும் சோர்வாக உள்ளது. இன்று அவர்களுக்கு பல மாணவர்களின் முகத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இதில் என்ன மிகப்பெரிய லாபம்? இன்று முழுவதும் குழந்தைகளே நீங்கள்தான் டி.வி.யில் இருந்தனர். நான் ஒரு பணியாளர். நான் மிகவும் கடினமாக உழைக்கின்றேன். மற்றவர்களும் கடினமாக உழைக்க செய்கிறேன். நான் யார் என்பதை தேடுவதில் அனைவரும் ஆர்வமாக உள்ளனர் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. நான் யார் என்பதை நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ” என்றார்.

மற்றொரு மாணவி….அரசியல் தொழிலுக்கு வந்துள்ளீர்கள்.. இதை எப்படி சமாளிக்க போகிறீர்?

ம்ம்ம்….சிரித்த படி…முதலில் அரசியல் என்பது தொழில் அல்ல, மக்களுக்கு செய்யும் சேவை.

நம் நாடு, நம் மக்கள் என்று நினைத்து அவர்களுக்கு செய்யும் சேவையாக கருத வேண்டும்.

என்று தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளுக்கு ஒரு கதையையும் சொன்னார்…

மோடி சொன்ன “குட்டிக்’ கதை…….

ஒரு ஊரில் 5 வயது பெண் குழந்தை, தன் 3 வயது தம்பியை சுமந்துக் கொண்டு நடந்து சென்றாள். அதை பார்த்த மகாத்மா ஏ…குழந்தாய் நீயே சிறுமி, இப்படி மற்றொரு சிறுவனை சுமந்து செல்கிறாயே.. எப்படி முடியும்? எப்படி தாங்குவாய் ….. என்று கேட்டார்.அதற்கு அந்த சிறுமி இது என் தம்பி… என்றாள்.

அட இது யார் என்று நான் கேட்கவில்லை பளுவை எப்படி சுமக்கிறாய் என்று கேட்டேன்…. மறுபடியும் அந்த சிறுமி அது என் தம்பி என்றாள்.மகாத்மாவுக்கு மறைமுகமான இந்த பதில் விளங்கிவிடவே சிரித்தபடியே சென்று விட்டார்….சிறுமியாக இருந்தாலும்…..என் குடும்பம், என் தம்பி என்று சொல்லும் போது…..அரசியலுக்கு வந்து விட்டால் அதனை தொழிலாக நினைக்கக் கூடாது…….இது ஒரு சேவை….மக்களுக்காக செய்யும் சேவையாகவே நாம் கருத வேண்டும்…..இதில் எத்தனை கடினங்கள் வந்தாலும் சமாளிப்பேன் என்றார் மோடி.

 

பிரதமர் உரையின் வீடியோ பார்க்க + கேட்க :::www.youtube.com/watch?v=boyhdPfLo0w