உதயநிதி + நயன்தாரா இணையும் ” நண்பேண்டா” மினி ஆல்பம்
உதயநிதி தமிழில் “ஆதவன்” என்னும் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானார். பிறகு, “ஒரு கல் ஒரு கண்ணாடி”,“இது கதிர்வேலன் காதல்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து “நண்பேண்டா” என்னும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.ஏற்கனவே நயன்தாராவுடன், “இது கதிர்வேலன் காதல்”, “ஆதவன்” போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ள உதயநிதி தற்போது மூன்றாவது முறையாக நயன்தாராவுடன் இப்படத்தில் இணைவதுடன் ம். இப்படத்தில் நடிகை தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது அடிசினல் தகவல்.இப்படத்தில் சந்தானமும் நடித்துள்ள படத்தை “ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற படத்தை இயக்கிய ராஜேஷின் இணை இயக்குனர் ஜெகதீஷ் என்பவர் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.








