நகைச்சுவையான ‘உ’ படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
போனிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “உ’. ஆஜித், வருண், நேஹா, மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முக்கிய பாத்திரமேற்று தம்பி ராமையா நடிக்கிறார். புதுமுகம் ஆஷிக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “” நல்ல காரியங்களைத் தொடங்கும் போது “உ’ என பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். ஓலைச் சுவடிகள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் எழுத்தாணியால் எழுதுவதற்கு ஏற்ற ஓலைச்சுவடியா? என்று பார்க்க “உ’ என்ற எழுத்தைத்தான் எழுதி பார்ப்பார்கள். “உ’ என எழுதப்படும் போது ஓலைச்சுவடி வளைந்தால் அது எழுதுவதற்கு ஏற்றது அல்ல என ஒதுக்கி விடுவார்கள். அதைக் குறிக்கும் விதத்தில்தான் இப்படத்துக்கு “உ’ என்பதை தலைப்பாக வைத்திருக்கிறேன். இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் முதன் முதலாக தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள்தான் கதை. தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை நகைச்சுவையாகவே திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு சிலரைத் தவிர நடிகர்கள் முதல் தொழில் நுட்பக் கலைஞர்கள் வரை எல்லோருமே 25 வயது உள்ள இளைஞர்கள்தான் இதில் பணியாற்றியிருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது” என்றார் இயக்குநர் ஆஷிக்.














