திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு ஒழுக்கக்கேடானது! டெல்லி கோர்ட் தீர்ப்பு
“வயது வந்த ஆண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து வயதுக்கு வந்த பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டு, பின்னர் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்தால், அது கற்பழிப்பு குற்றம் ஆகாது.என்றாலும் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தார்மீக ஒழுக்க நெறிகளுக்கு முரணானது. இத்தகைய உறவை எந்த மதமும் அனுமதிக்கவில்லை. “என்று டெல்லி கோர்ட் தீர்ப்பு கூறி உள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர் மீது கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் போலீசில் கற்பழிப்பு புகார் கூறினார்.
இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகார் மனுவில், வலைத்தளத்தின் மூலம் அந்த வாலிபருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த வாலிபர் தன்னுடன் பல முறை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாகவும், ஆனால் பின்னர் அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் கூறி இருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வீரேந்தர் பட், கற்பழிப்பு குற்றச்சாட்டில் இருந்து வாலிபரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி தனது தீர்ப்பில்,”வயது வந்த ஆண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து வயதுக்கு வந்த பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டு, பின்னர் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்தால், அது கற்பழிப்பு குற்றம் ஆகாது என்பது எனது கருத்து ஆகும்.
ஒரு பெண் வளர்ந்து, கல்வி கற்று, அலுவலகத்துக்கு பணிக்கு செல்லும் போது ஒரு நண்பருடனோ அல்லது உடன் பணிபுரியும் சக ஊழியருடனோ பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அப்படி வாய்ப்பு ஏற்படும் போது, திருமணம் செய்து கொள்வதாக அந்த நபர் அளிக்கும் வாக்குறுதியை நம்பி அவருடன் அந்த பெண் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது, அவர் தனக்குத்தானே ஆபத்தை தேடிக்கொள்வது ஆகும்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி வாலிபர் வாக்குறுதி அளித்தால், அதை அவர் நிறைவேற்றுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதை அந்த பெண் புரிந்து கொள்ள வேண்டும். வாக்குறுதி அளித்த வாலிபர் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம்.
என்றாலும் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தார்மீக ஒழுக்க நெறிகளுக்கு முரணானது. இத்தகைய உறவை எந்த மதமும் அனுமதிக்கவில்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு மத கொள்கைகளுக்கு விரோதமானது ஆகும்.”என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.
Pre-marital sex ‘immoral’, no religion permits it: Delhi Court
*****************************************************************
Pre-marital sex is “immoral” and against the “tenets of every religion”, a Delhi court has said while holding that every act of sexual intercourse between two adults on the promise of marriage does not become rape.Additional sessions judge Virender Bhat also held that a woman, especially grown up, educated and office-going, who has sexual intercourse on the assurance of marriage does so “at her own peril”. “In my opinion, every act of sexual intercourse between two adults on the assurance of promise of marriage does not become rape, if the assurance or promise is not fulfilled later on by the boy,” the judge said.


