ஜிஎஸ்எல்வி டி5 -வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த ராக்கெட் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டதாகும்.தகவல் தொடர்பு சேவைக்காக, 1982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.
கடைசி நேரத்தில் ராக்கெட்டின் இரண்டாவது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் திரவ எரிபொருள் கசிந்தது. இதனால், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது நிறுத்தப்பட்டது நினைவு கூற்த்தக்க்து.

இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் ஜிஎஸ்எல்வி – டி 5 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 4.18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. மொத்தம் 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 என்ற தொலைத்தொடர்பு செயற்கைகோளை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளது. ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் மொத்தம் 17 நிமிடங்கள் பயணம் செய்து ஜிசாட் – 14 செயற்கைகோளை பூமியிலிருந்து அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோமீட்டர் தூரமும், குறைந்தபட்சம் 180 கி.மீட் டர் தூரமும் கொண்ட பாதையில் நிறுத்தியது.
இந்த 17 நிமிடங்களில், கிரையோஜெனிக் இன்ஜின் மட்டும் 12 நிமிடங்கள் இயக்கப்பட்டது.தவிர எரிபொருள்களை எடுத்துச் செல்லும் 4 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல் தொடர்புகளை அளிக்கும் வகையில் 6 கே.யு. டிரான்ஸ்பாண்டர்கள், 6 இ.எக்ஸ்.டி, சி பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள், கே.ஏ. பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கோளின் ஆயுள் காலம் மொத்தம் 12 ஆண்டுகள் ஆகும். இன்சாட் – 3சி, இன்சாட் 4சிஆர், கல்பனா-1 ஆகிய செயற்கைகோளுக்கு அருகில் இது நிலை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


