தலைமை தகவல் ஆணையரானார் சுஷ்மா சிங்!

தலைமை தகவல் ஆணையரானார் சுஷ்மா சிங்!

தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்து வரும் தீபக் சாந்து, இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை தகவல் ஆணையராக சுஷ்மாசிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் சட்ட மந்திரி கபில்சிபல் ஆகியோர் ஒரு மனதாக நியமித்துள்ளனர்.
nov 35 - r t i  lady
கடந்த 1972-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சுஷ்மா சிங், மத்திய அரசு செயலாளராக பணியாற்றி உள்ளார். மேலும் தகவல் தொடர்பு அமைச்சக செயலாளராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், இவர் தகவல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.

Related Posts