32°C
விளம்பரம்
Advertisement

ஆளில்லா விமானம மூலம் கூரியர் சர்வீஸ்!: அமேசான் திட்டம்

admin சேலம் Published: December 5, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஆன் லைன் முன்னோடியான அமேசான், ட்ரோன் (Drone) என சொல்லப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.
dec 5 - vanikam amesan
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அளித்த பேட்டியில், “இந்தத் திட்டத்தின்படி, ஆள் இல்லாமல் தானாக இயங்கும் குட்டி விமானங்கள் பார்சலை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும். 10 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இந்த விமானங்கள் பார்சலை கொண்டு வந்து சேர்க்கும். இதன் மூலம் இணையத்தில் ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் பொருள் வாடிக்கையாளர் வீட்டுக்கு வந்து விடும். 5 கிலோ எடை வரையிலான பொருட்களை இந்த விமானங்களால் சுமந்து வர முடியும்.”என்றார்

இது தொடர்பாக ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோவில், குட்டி விமானம் மஞ்சள் நிற பெட்டியில் பார்ச்லை சுமந்து பறந்து வருகிறது. இந்த விமானத்திற்கு ஆக்டோகாப்டர் என பெயரிடப்பட்டுள்ளது.

அமேசானைப் பொறுத்தவரை இந்த சேவை நடைமுறைக்கு வர 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகலாம் என்றும இது போன்ற ஆள் இல்லா விமானத்தை டெலிவரிக்கு பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது அமேசான் மட்டும் அல்ல. டொமினோஸ் நிறுவனம் பிட்சாக்களை ஆள் இல்லா விமானம் மூலம் வழங்கும் முயற்சியில் முன்னரே இறங்கி விட்டதாகக சொல்லப்படுகிறது.

இனி இது குறித்து அமேசான் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு::

https://www.youtube.com/watch?v=98BIu9dpwHU

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்