டெல்லி:கெஜ்ரிவால் அமைச்சரவை சனிக்கிழமை பதவி ஏற்பு!

டெல்லி:கெஜ்ரிவால் அமைச்சரவை சனிக்கிழமை பதவி ஏற்பு!

டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் அனுப்பிய பரிந்துரைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.இதனையடுத்து பதவியேற்பு விழாவை வரும் சனிக்கிழமை நடத்துவது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆலோசித்து, துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
kejriwal- 25
டில்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். நாளை ராம்லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் கெஜ்ரிவால் டில்லி முதல்வராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கெஜ்ரிவால் தன்னுடன் பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை தேர்வு செய்து விட்டார். இதற்கிடையில் ஆட்சி அமைக்க ஜனாதிபதியின் ஒப்புதல் அவசியம் என்ற நிலையில், துணைநிலை கவர்னர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தார். ஆனால் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால் தான் திட்டமிட்டபடி நாளை பதவியேற்பு நிகழ்ச்சி இருக்காது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது தொடர்பாக பரிந்துரைக் கடிதத்த்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (புதன் கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்இதனையடுத்து பதவியேற்பு விழாவை வரும் சனிக்கிழமை நடத்துவது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆலோசித்து, துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.