ஜூலை 10 முதல் ZEE5-ல் அதிரடியாக வெளியாகும் ‘பரிமளா & கோ’!

ஜூலை 10 முதல் ZEE5-ல் அதிரடியாக வெளியாகும் ‘பரிமளா & கோ’!

குடும்பங்கள் கொண்டாடும் கலகலப்பான திரைப்படங்களை இயக்குவதில் கைதேர்ந்த இயக்குநர் பாண்டிராஜின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘பரிமளா & கோ’, வரும் ஜூலை 10 முதல் ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகிவிட்டது. இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-ல், ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் இப்படம் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், பசங்கா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், ஒட்டுமொத்த குடும்பமும் இணைந்து வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு முழுமையான என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

நட்சத்திரப் பட்டாளமும்.. நையாண்டிக் கூட்டணியும்..!

இப்படத்தின் மிகப்பெரிய பலமே இதன் அசாத்தியமான நட்சத்திரக் கூட்டணிதான். மூத்த ஆளுமைகளான ஜெயராம் மற்றும் ஊர்வசி முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் இயக்குநர் மிஷ்கின், நகைச்சுவை மன்னன் யோகி பாபு, நடன இயக்குநர் சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் என ஒரு பெரும் மாஸ் கூட்டமே இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் பாண்டிராஜின் எதார்த்தமான வசனங்களும், சூழ்நிலை நகைச்சுவைகளும் (Situation Comedy) இந்த நட்சத்திரங்களின் அசாத்திய நடிப்புடன் இணையும்போது, படம் பார்ப்பவர்களுக்கு ஒரு அக்மார்க் பொழுதுபோக்கு கேரண்டி.

கலகலப்பான குடும்பமும்.. கில்லாடி கொலை மர்மமும்!

நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளோடு, ஒரு சுவாரசியமான கொலை மர்மத்தையும் (Murder Mystery) கைகோர்த்து இந்தக் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர். எதிர்பாராத விதமாக ஒரு விசித்திரமான கொலையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கிக்கொள்கிறது ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம்.

சந்தேகப் பார்வைகள், வெளிச்சத்திற்கு வரும் குடும்ப ரகசியங்கள், அதற்குப் பின்னால் நடக்கும் தொடர்ச்சியான கலகலப்பான தவறான புரிதல்கள் என சஸ்பென்ஸும் சிரிப்பும் கலந்த ஒரு ரோலர் கோஸ்டர் பயணமாக ‘பரிமளா & கோ’ திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மொழிகளைக் கடந்து மனங்களைத் தொடும்

இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர் குறித்து ZEE5-ன் தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் லாயிட் சேவியர் கூறும்போது, “மொழிகள் மற்றும் பிராந்தியங்களைத் தாண்டி ஒட்டுமொத்த குடும்பங்களின் மனதைத் தொடும் கதைகளை வழங்குவதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். நகைச்சுவை, உணர்வு மற்றும் மர்மம் ஆகியவற்றை புத்துணர்ச்சியூட்டும் வகையில் இணைக்கும் முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கு ‘பரிமளா & கோ’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” எனத் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் நேர்த்தியான ஒளிப்பதிவு, ‘Foxn’ அமைப்பின் பின்னணி இசை எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் தரம் வாய்ந்த இந்தத் திரைப்படம், தியேட்டர் அனுபவத்திற்கு இணையான கொண்டாட்டத்தை இல்லங்கள்தோறும் கொண்டு சேர்க்கப் போவது உறுதி. வரும் ஜூலை 10 முதல் உங்கள் ZEE5 தளத்தில் இந்த சிரிப்பு வேட்டையைக் காணத் தயாராகுங்கள்!