சி.பி.ஐ. உயரதிகாரிகளை விசாரிக்க அரசின் ஒப்புதல் தேவையில்லை! சுப்ரீம் கோர்ட்
பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணியசாமி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் இணைச்செயலர், அதற்கு மேலான அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை என்றும் மத்திய அரசின் அனுமதியின்றியே சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பால் புகாருக்கு ஆளான அதிகாரிகள் விசாரிக்கப்பட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் மூத்த அதிகாரிகளின் மீது கூறப்படும் ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தால், அதற்கு அரசிடம் முன்கூட்டி அனுமதி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.
அதில் ’ஊழல் தொடர்பான விசாரணைகளில் அனைத்து அரசு அதிகாரிகளும் சரிசமமாகவே நடத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் ’மூத்த அதிகரிகள்’ என்ற தகுதிக்கு எந்த சிறப்பு சலுகையும் இல்லை. இந்நிலையில், இணை செயலாளர் மற்றும் அதற்கும் மேற்பட்ட உயர்பதவி வகிப்பவர்களை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற சட்ட பாதுகாப்பானது, ஊழல்வாதிகளை காக்கும் கேடயம் போல் ஆகிவிடும். எனவே, அரசின் இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டது அல்ல; செல்லத்தக்கதும் அல்ல’ என்று தீர்ப்பளித்துள்ளது.


