இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரத போராட்டம் 16-வது ஆண்டை தொட்டது

இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரத போராட்டம் 16-வது ஆண்டை தொட்டது

மணிப்பூரைச் சேர்ந்த பிரபல சமூகசேவகி இரோம் ஷர்மிளா. இவர் மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெறக் கோரி கடந்த 2000–ம் ஆண்டு, நவம்பர் 5-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
Sharmila-Iron-Lady
ராணுவ சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை, தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறி கடந்த ஆண்டு காவல்துறையினர் கைது செய்து பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுதலை செய்தனர்.

இதையடுத்து, மணிப்பூர் தலைநகர் இம்பாலிலுள்ள சிறையிலிருந்து விடுதலையான இரோம் சர்மிளா, மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இரோம் ஷர்மிளாவின் போராட்டம் 16-ம் ஆண்டை எட்டியுள்ளது. 15 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்ததையொட்டி, இம்பாலில் ஷர்மிளாவுடன் கவிஞர்கள் சிலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் தலைநகர் டெல்லியில் அவருக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.முன்னதாக, தன்னுடையை 15-வது வயதில் உண்ணாவிரதத்தை தொடர்ந்த அவர், தற்போது 30 வயதை தாண்டியுள்ளார். மணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று தற்போது இரோம் ஷர்மிளா அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.