கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்டவைக்கும் துனீசியா இளம்பெண்கள்!

கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்டவைக்கும் துனீசியா இளம்பெண்கள்!
வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள அரபு நாடு துனீசியா. இந்த நாடு அரபு நாடுகளில் அதிக கல்வியறிவைக் கொண்டதாகும். இருப்பினும் உலகை உலுக்கிய பொருளாதார சீல்குலைவிற்குப் பின், வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றில் சிக்கி அந்நாடு திண்டாடி ஆட்சி மாறியதெல்லாம் தெரிந்த விஷயம்தான். அதே சமயம் வட ஆப்ரிக்காவில் பெண்களின் உரிமைகளில் சிறந்த நாடாக துனீசியா கருதப்படுகிறது. ஆனால், மதமும், பாரம்பரியமும் திருமணம் ஆகும்வரை இளம் பெண்கள் கன்னித்தன்மையுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. பெண்கள் கன்னித்தன்மை இல்லாதவர்களாக இருப்பதை கண்டுபிடித்தால், விவாகரத்து பெற்றுகொள்ளும் சட்ட உரிமையும் துனீசிய சட்டத்தில் உள்ளது. இதற்காக,  பெரும்பாலானா பெண்கள் தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 400 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 26 ஆயிரம் ரூபாய்) செலுத்த வேண்டும். இதற்காக பல பெண்கள் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்ய இருப்பவருக்கு தெரியாமல் ரகசியமாக பல மாதங்கள் பணத்தை சேமிக்கும் போக்கு நிலவுகிறது.
இந்த அறுவை சிகிச்சை செய்பவரில் கொஞ்சம் பிசியானவர் ஒரு மகளிர் சிறப்பு மருத்துவர் ராசிட். சராசரியாக, வாரத்திற்கு இரண்டு கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சை களை இவர் மேற்கொண்டு வருகிறார்.தங்களுடைய குடும்பத்திற்கும், உறவினருக்கும் அவமா னத்தை கொண்டு வரும் என்பதால். தன்னுடைய வாடிக்கையாளரில் 99 சதவீதத்தினர் பயத்தால் அவரிடம் வருவதாக ராசிட் தெரிவிக்கிறார்.
உண்மையிலே தாங்கள் கன்னித்தன்மையோடு இல்லை என்பதை மறைக்கவே பலரும் முயல்கின்றனர்.ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்துபோக வாய்ப்புக்கள் உள்ளது, இதனால், திருமணத்திற்கு முன்னரே இவர்கள் உடலுறவு கொண்டுள்ளனர் என்று தவறுதலாக குற்றுஞ்சாட்டப்படலாம் என்ற கவலையையும் பெண்களிடம் நிலவுவதை போக்க என்னால் இயலவில்லை என்கிறார் மேறப்டி டாக்டர்!
error: Content is protected !!