32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26035 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2594)
ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவரான இந்திய பெண்மணி! உலகம்

ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவரான இந்திய பெண்மணி!

அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கொள்ரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு ரூ.20 கோடி தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும், கொலம்பியா வர்த்தக பள்ளியில் எம்.பி.ஏ. பட்டப் படிப்பும் படித்துள்ளார்.2012 ஆம் ஆண்டு இவர் ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் […]

September 7, 2013 admin
ஆணுறை வழங்கும் இயந்திரங்களில்  90 சத மிஷின்களை காணோமாம்! இந்தியா

ஆணுறை வழங்கும் இயந்திரங்களில் 90 சத மிஷின்களை காணோமாம்!

மத்திய அரசு மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இது வரை ஸ்பெக்ட்ரம் முதல் நிலக்கரி வரை பல்வேறு துறைகளில் ஊழல் மற்றும் இழப்பீடு நடந்து வருவதாக மத்திய தணிக்கை குழு தெரிவித்து வந்துள்ளது. இந்த பிரச்னை பார்லிமெண்டில் புயலை ஏற்படுத்தும். இதற்கு பதில் அளிக்க முடியாமல் பிரதமர் முதல் அனைத்து அமைச்சர்களும் திணறி வருகின்றனர். இந்நிலையில் மத்திய தணிக்கை குழு பார்லி.,யில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் தேசிய எய்ட்ஸ் […]

September 7, 2013 admin
ஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல்! கல்வி

ஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல்!

உணவும் உறைவிடமும் மனிதனுக்கு அத்தியாவசியமானத் தேவைகள். அவற்றுக்கு அடுத்தபடியாக அவனுக்குத் தேவை, கதை சொல்வதும் அதைக் கேட்பதும். ஆனால், இன்று கதை சொல்வது என்பதே கதையாகிப் போய்விட்டது. கதைகள், பாடல்கள் இவையெல்லாம் நாம் யார் என்பதைத் தெரிவிக்கும் ஒரு செய்தித் தொடர் சங்கிலி. நம்மைப் பற்றி குழந்தைகளுக்குத் தெரிய வேண்டுமானால் நமது பாரம்பரிய பாடல்களையும் கதைகளையும் முதலில் கற்றுத்தர வேண்டும். பாட்டின் மூலம் நம்முடைய நாட்டின் இயற்கை வளம், விலங்கினங்கள், பறவை வகைகள் எல்லாவற்றைப் பற்றியும் அறிந்து […]

September 7, 2013 admin
இஸ்ரோவில்  கூட ஊழல்! : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்!! இந்தியா

இஸ்ரோவில் கூட ஊழல்! : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்!!

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியாவால் லண்டன் ஒலிம்பிக்கில் ஜொலிக்க முடியவில்லை , உலக பதக்க பட்டியலில் 41வது இடத்தை பிடிக்கதான் முடிந்தது. இந்த விரக்க்த்தியினால் தானோ எண்ணவோ. இந்தியாவை எப்படியும் உலக ஊழல் பட்டியளிலாவது முன்னுக்கு கொண்டு வந்தே தீருவது என நம்மை ஆள்பவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகவே தோன்றுகிறது. இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. நடநதவை இவை மட்டுமே அல்ல. இவை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் கவனத்திற்கு […]

September 7, 2013 admin
சொத்து பட்டியல் சமர்ப்பிககாத  துணை கலெக்டர்களுக்கு கிடுக்கிப் பிடி! Uncategorized

சொத்து பட்டியல் சமர்ப்பிககாத துணை கலெக்டர்களுக்கு கிடுக்கிப் பிடி!

அரசு ஊழியர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் மற்றும் குடும்பத்தினர் சொத்து விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இதை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் செய்வதில்லை. தமிழகத்தில் வருவாய், நில நிர்வாகம், கலால், முத்திரைத்தாள், அரசு நலத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துணை கலெக்டர்கள் அந்தஸ்தில் 576 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களிடம் சொத்து விபர பட்டியலை பெற அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பிறப்பித்துள்ள […]

September 7, 2013 admin
அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் மர்ம நபரால் சுட்டுக் கொலை: உலகம்

அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் மர்ம நபரால் சுட்டுக் கொலை:

அமெரிக்காவின் வடக்கு இன்டியானா நகரில் 2 பேர் பல்பொருள் அங்காடிக்கு சென்று தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க வந்துகொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன் சிங் (22 வயது) என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வாழ் இந்தியர்களான ஜக்தார் பட்டி (55). பவான் சிங் (20) ஆகியோர் நேற்று இரவு அமெரிக்காவிலுள்ள இண்டியானா நகரில் பல்பொருள் அங்காடி […]

September 7, 2013 admin
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போமா?. ஹெல்த்

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போமா?.

பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால், உடலில் மட்டுமின்றி, […]

September 7, 2013 admin
இனி வருமான வரி  வங்கிகளில் செலுத்தலாம்! வணிகம்

இனி வருமான வரி வங்கிகளில் செலுத்தலாம்!

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பெரும்பாலான வங்கிகள் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தும் வசதிகளை அளிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”செப்டம்பர் மாத கடைசியில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள தரமதிப்பீடு உடைய வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாரத ஸ்டேட் […]

September 7, 2013 admin
‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்: தமிழகம்

‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்:

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். பல இடங்களில் குடிநீர் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘மினரல் வாட்டர்’ வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டது.கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் மினரல் வாட்டர் ரூ.1 முதல் 1.50 வரை புழக்கத்தில் உள்ளது. ரெயில்களில் 1 லிட்டர் மினரல் வாட்டர் (ரெயில் நீர்) ரூ.15–க்கு விற்பனை செய்யப்படுகிறது. மினரல் வாட்டர் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் தரமான […]

September 7, 2013 admin
10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை! இந்தியா

10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை!

மத்தியில் மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்றும் விதத்தில் காங்கிரஸ் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ( 2 ஆயிரத்து 983 கோடி ரூபாய் செலவி்ல் 60 சதவீத ஊரகப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஆயிரத்து 989 கோடி செலவி்ல் 40 சதவீத கிராம புற மாணவர்கள் பயன்படத்தக்க வகையி்ல) கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கவும் முடிவு […]

September 7, 2013 admin
உடனடி செய்திகள்