32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26036 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2591)
டிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில்  பணி வாய்ப்பு! வேலை வாய்ப்பு

டிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில் பணி வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அதிகாரி கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளார்க் பணியில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (HR BD), City Union Bank Ltd., Cenetral Office, […]

September 11, 2013 admin
இந்திய இயக்குநரின் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’  மர்மத் திரைப்பட கதை + ஸ்டில்ஸ் சினிமா செய்திகள்

இந்திய இயக்குநரின் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’ மர்மத் திரைப்பட கதை + ஸ்டில்ஸ்

இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன சுவாமிகந்தன் இயக்கியிருக்கும் ‘தி சீக்ரெட் விள்ளேஜ் திரைப்படத்தில் ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேசன்பி.விட்டியர்-உடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார். ஜோனாதன்பென்னட்-ன் 50வது படம்தான் இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘மெமோரியல்டே’, மீன்கேர்ள்ஸ்’ படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.அலிஃபால்க்னர்–“திடிவிலைட்சகா – பிரேக்கிங்டான் – பார்ட் 1” மற்றும் “பேட்கிட்ஸ்கோடூஹெல்”படத்திலும், ஸ்டெலியேசவன்டே–“ஏ பியூட்டிபுல்மைன்ட்,” “அக்லிபெட்டி” படத்திலும் நடித்தவர். ரிச்சர்ட்ரைல்-ன் 210வது படம்இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘ஹாலோவின்’, ஆபீஸ்ஸ்பேஸ்” […]

September 11, 2013 admin
உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு  222 இடம்! உலகம்

உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு 222 இடம்!

உலகளவில், தரம் வாய்ந்த யுனிவர்சிட்டிகளின் பட்டியலை அமெரிக்க நிறுவனம் நேற்று வெளியிட்டது. உலக நாடுகளில் உள்ள 90 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் உள்ள உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வசதிகள், படிப்புகள், மாணவர்களின் முனைப்பு, ஒழுக்கம், ஆசிரியர்களின் தரம், சர்வதேச அங்கீகாரம் என பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் டில்லி ஐ.ஐ.டி.,க்கு 222வது “ரேங்க்’ கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘குவாகுரேலி சைமண்ட்ஸ்’ என்ற […]

September 11, 2013 admin
காலி வாட்டர் பாட்டில் கொடுத்தால் ரயில் டிக்கெட்! – சீனா அதிரடி உலகம்

காலி வாட்டர் பாட்டில் கொடுத்தால் ரயில் டிக்கெட்! – சீனா அதிரடி

காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி குடி நீர் பாட்டில்களை ஒன்றாக சேகரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 2 சப்வே ரயில் நிலையங்களில், காலி பாட்டில் சேகரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு […]

September 11, 2013 admin
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கமல் & ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ ரீ- ரிலீஸ்.! சினிமா செய்திகள்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கமல் & ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ ரீ- ரிலீஸ்.!

25 வருடங்களுக்கு முன்பு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கே.பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’.தற்போது சினிமாஸ்கோப் மற்றும் டி.டி.எஸ் ஒலிப்பதிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக உள்ளது. அதையொட்டி இந்தப்படத்தின் ட்ரெய்லர் பங்ஷன் சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கண்ணதாசன் பாடல்களுக்கு எஸ்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம். சிங்கப்பூரில் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ள நினைத்தாலே இனிக்கும் படத்தை கே.பாலச்சந்தர் டைரக்‌ஷன் செய்துள்ளார். […]

September 10, 2013 admin
டெல்லி மாணவி பாலியல் வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள்: தண்டனை நாளை அறிவிப்பு: இந்தியா

டெல்லி மாணவி பாலியல் வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள்: தண்டனை நாளை அறிவிப்பு:

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று கூறியுள்ள டெல்லி விரைவு நீதிமன்றம், தண்டனை தீர்ப்பு நாளை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.அதே சமயம் இன்று குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மாணவியின் தாய், தந்தையர் கூறியுள்ளனர். இது குறித்து இருவரும் நிருபர்களிடம் பேசுகையில்,” கடந்த வாரம் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது எங்களுக்கு கவலை அளித்தது. சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை எங்களுக்கு […]

September 10, 2013 admin
இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்! வேலை வாய்ப்பு

இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் இதோ…. துறை வாரியாக காலியிடங்கள்: மெக்கானிக்கல் 876, ஐ.டி., 23, எலக்ட்ரிகல் 133, கெமிக்கல் 296, சிவில் 39, மெடலர்ஜி 46, கிளாதிங் டெக்னாலஜி 32, லெதர் டெக்னாலஜி 4, ஸ்டோர்ஸ் 47, ஓ.டி.எஸ்., […]

September 10, 2013 admin
தேசிய ஓபன் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் காயத்ரி முதலிடம்! இது லேடீஸ் ஏரியா

தேசிய ஓபன் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் காயத்ரி முதலிடம்!

53-வது தேசிய ஓபன் தடகள போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை காயத்ரி 13.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் சர்வதேச அளவில் 20, தேசிய அளவில் 150, மாநில அளவில் 200, உள்ளூர் போட்டிகள் என மொத்தம் 400க்கும் மேல்.வாங்கியவர் என்பது பெருமைக்குரிய விஷயம்.மேலும் ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட காயத்ரி […]

September 10, 2013 admin
தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’ – அல்பம் சினிமா செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’ – அல்பம்

மனுஸ்ரீ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மனுக்கண்ணன், பானுமதி யுவராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அங்குசம்’. இதில் நாயகனாக கந்தா, நாயகியாக ஜெயந்தி நடிக்கின்றனர். வாகை சந்திரசேகர், சார்லி, பாலாசிங், பாவா லட்சுமணன், கராத்தே ராஜா, காதல் சுகுமார், காதல் தண்டபாணி, ரஞ்சன், மீராகிருஷ்ணன், ரேகா சுரேஷ், பிருந்தாதரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி மனுக்கண்ணன் இயக்குகிறார். படம் பற்றி கேட்டபோது,.”தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. திருச்சியில் […]

September 10, 2013 admin
மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் : கருணாநிதி வலியுறுத்தல்! தமிழகம்

மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் : கருணாநிதி வலியுறுத்தல்!

“மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி – கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டது” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மராட்டிய மாநில அரசு அண்மையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் மற்றும் […]

September 10, 2013 admin
உடனடி செய்திகள்