32°C
விளம்பரம்
Advertisement

தமிழக சட்டசபை நாளை மாலை அவசரமாக கூடுகிறது!

admin சேலம் Published: November 11, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை மாலை அவசரமாக கூடுகிறது. விசேஷமாக கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
Nov 11 -_SECRETARIAT_
இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.இதனிடையே, “இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்; பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 24ஆம் தேதி தீர்மானம் நிறைபேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்றும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார் என்று அண்மையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு கூடுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மன்றத்தில் இக்கூட்டம் நடைபெறும் என்று சட்டசபை செயலாளர் இன்று அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும், காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி குர்ஷித் பங்கேற்பது பற்றி விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்