32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2492)
டெல்லி :நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி! Running News

டெல்லி :நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!

டெல்லி சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. .அப்போது 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், தீர்மானத்துக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 28 பேர், காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர், ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் ஒருவர், சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 37 பேர் எழுந்து நின்றனர். தீர்மானத்துக்கு எதிராக பாரதீய ஜனதா உறுப்பினர்கள் 31 பேர், அதன் கூட்டணி கட்சியான அகாலிதளம் உறுப்பினர் ஒருவர் என 32 பேர் […]

January 3, 2014 admin
கனடா எம் பி ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கையில் வீட்டுக்காவல்? Running News

கனடா எம் பி ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கையில் வீட்டுக்காவல்?

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களை சந்திக்க வந்த கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 28ம் தேதி யாழ்ப்பாணத்திற்கு வந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழருமான ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான மாவிட்டபுரத்திற்குச் சென்றிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்த அவர், அவர்களின் நலன்கள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். இந்நிலையில் நேற்று முல்லைத்தீவுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை […]

January 1, 2014 admin
‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்! Running News

‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது. டீசர் பார்க்க::http://www.youtube.com/watch?v=pC8i-fk9mt0

January 1, 2014 admin
விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு Running News

விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு

நமது தேசத்தின் பெருமைக்குரிய இந்திய விமானப் படையில் பெண்களுக்கான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் ஜனவரி 2015 முதல் பிளையிங், டெக்னிகல், கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் உள்ள பதவிகளை நடத்துவதற்கான பொது நுழைவுத் தேர்வு(Air Force Common Admission Test (AFCAT)01/2014)க்கான அறிவிப்பு வந்துள்ளது. ப்ளையிங் பிராஞ் 44 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவிகித […]

January 1, 2014 admin
நில ஆர்ஜித புது சட்டம் – இன்று முதல் அமலாகிறது Running News

நில ஆர்ஜித புது சட்டம் – இன்று முதல் அமலாகிறது

வலுக்கட்டாயமாக நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்கவும், கையகப்படுத்தும் நிலங்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும் நில ஆர்ஜித சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் 1894ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதற்கான புதிய சட்ட மசோதா, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டது. இரு அவை களிலும் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனாபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்தார்.இந்த நிலையில், நில ஆர்ஜித சட்ட மசோதா இன்று நாடு முழுவதிலும் அமலுக்கு […]

January 1, 2014 admin
விஜயகாந்த் – வாசன் சந்திப்பு:காங். + தேமுதிக கூட்டணி? Running News

விஜயகாந்த் – வாசன் சந்திப்பு:காங். + தேமுதிக கூட்டணி?

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட இருவரும் 45 நிமிடம் முக்கிய ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து காங்கிரஸ் தேமுதிக கூட்டணி ஏற்படும என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரப்ப பட்டு வருகிறது.. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்க திமுக, பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், […]

January 1, 2014 admin
இலங்கை தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் தயார்! Running News

இலங்கை தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் தயார்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அகதிகளாக வசித்து வரும் மக்களுக்காக இந்திய அரசு 10 ஆயிரம் வீடுகள் கட்டி தந்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 33 ஆயிரம் வீடுகள்கட்டி தரவும் உள்ளது என கொழும்புவில் உள்ள இந்திய ஹைகமிஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்தனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். […]

January 1, 2014 admin
புத்தாண்டுகள் பலவிதம! Running News

புத்தாண்டுகள் பலவிதம!

ஓர் ஆண்டு என்பது 365 நாள்கள் கொண்டதாக, கி.மு.4241லிருந்து, வழக்கமாக இருந்தது தெரியவருகிறது. முதலாவதான காலண்டர் (ஆல்மனாக்) அதாவது பஞ்சாங்கம், வைவஸ்வத மனு சக்கரவர்த்தியின் காலத்தில், ஸப்த ரிஷிகளில் உருவாக்கப்பட்டது. இந்துக்களின் பஞ்சாங்கம் என்பது யுகங்களின் அடிப்படையிலானது. விண்மீன் ஆண்டுகள், கோள்களின் ஆண்டு, சூரியமான (சௌரமான) ஆண்டு, சந்திரமான ஆண்டு என்பனவாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. ஸப்தரிஷிகளின் காலத்திற்குப் பிறகு, இந்த ஆண்டுக் கணக்குகளில் சிறிது மாற்றங்கள் கண்டறியப்பட்டன. மகாபாரத காலத்தில் வேதவியாசர் இதில் கவனம் செலுத்தியுள்ளார். மகரிஷி விஸ்வாமித்திரர் […]

January 1, 2014 admin
நியூசிலாந்து தொடரில் இந்திய அணி: யுவராஜ்சிங் சிங் மிஸ்ஸிங்! Running News

நியூசிலாந்து தொடரில் இந்திய அணி: யுவராஜ்சிங் சிங் மிஸ்ஸிங்!

இந்திய அணி வரும் ஜனவரி 19 ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டி தொடரில் கலந்து கொள்கிறது. அங்கு 5 ஒரு நாள் போட்டியிலும், இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கிறது. இதில் பங்கற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.இந்த தொடரில் அதிரடி வீரர் யுவராஜ்சிங் தேர்வு செய்யப்படவில்லை. அறிமுக வீரர் ஈஸ்வர் பாண்டே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார். மற்றொரு […]

December 31, 2013 admin
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் ஆன்லைன் ஷாப்பிங்! Running News

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் ஆன்லைன் ஷாப்பிங்!

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஆன்லைன் மூலமாக பொருள்களை ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. இது மிக சௌகர்யமாக உள்ளதாகக் கருதுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும். மேலும் பணம் செலுத்துவதற்கு பல்வேறு வகையான வாய்ப்பு, வசதிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தகம் இந்த ஆண்டு (2013) 85 சதவீத அளவுக்கு அதிகரித்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் […]

December 31, 2013 admin
உடனடி செய்திகள்