எடிட்டர் ஏரியா
குறுக்குவழியில் வளரும் அறிவு: சொந்தச் சிந்தனைத் திறனை இழக்கும் ஜென் இசட்!
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, ஏஐ தொழில்நுட்பத்தை மிகத் தீவிரமாகப் பயன்படுத்தும் ஜென் இசட் (Gen Z) தலைமுறையினர், தாங்கள் கற்றுக்கொள்ளும் விசயங்களை நிஜ உலகப் பணிகளில் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்களையும் சிக்கல்களையும் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது. […]