32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26036 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 18)
உணவு இழப்பு மற்றும் வீணடிப்பு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு நாள்:சிறப்புப் பார்வை! Exclusive

உணவு இழப்பு மற்றும் வீணடிப்பு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு நாள்:சிறப்புப் பார்வை!

ஒருபுறம் லட்சக்கணக்கான மக்கள் போதிய உணவின்றி பசியால் வாடும் கசப்பான நிதர்சனத்தை மாற்றியமைப்பதும், மறுபுறம் உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவில் பெரும்பகுதி வீணடிக்கப்படுவதைத் தடுப்பதும் இன்றைய அவசியமான தேவையாகும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், உணவு வீணடிக்கப்படுவதைத் தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் நாள் ‘உணவு இழப்பு மற்றும் வீணடிப்பு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு நாள்’ (International Day of Awareness of Food Loss and Waste) கடைபிடிக்கப்படுகிறது. விவசாயப் […]

September 29, 2026 admin
’டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’:கோலாகலமாக நடந்த ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்! Running News

’டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’:கோலாகலமாக நடந்த ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்!

தென்னிந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble). அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி பெருமையுடன் வழங்குகிறார். ஷோபு யெர்லகடா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் பிரத்யேகப் ப்ரீ-ரிலீஸ் […]

September 28, 2026 admin
உலக வெறிநாய்க்கடி நோய் நாள்: ஒன்றாக இணைவோம் என்ற புதிய சிந்தனை! Exclusive

உலக வெறிநாய்க்கடி நோய் நாள்: ஒன்றாக இணைவோம் என்ற புதிய சிந்தனை!

உலகில் மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய தொற்றுகளில் வெறிநாய்க்கடி நோய் எனப்படும் ரேபிஸ் முன்னணியில் உள்ளது. ஒருமுறை நரம்பு மண்டலத்தைத்தாக்கி நோய் அறிகுறிகள் வெளிப்பட்டுவிட்டால், அதிலிருந்து மீள்வது என்பது மருத்துவ வரலாற்றில் மிக அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது. குணப்படுத்த முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்தும் இந்த நோயைப் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதன் தாக்கத்திலிருந்து உலகை விடுவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் நாள் உலக வெறிநாய்க்கடி நோய் தினமாக (World Rabies Day) கடைப்பிடிக்கப்பட்டு […]

September 28, 2026 admin
தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி உறவு மேலாளர்கள் வேலைவாய்ப்பு!  Exclusive

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி உறவு மேலாளர்கள் வேலைவாய்ப்பு! 

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Ltd – TMB) இந்தியாவின் முன்னணி மற்றும் பழமையான தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். உயர் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வரும் இந்த வங்கி, திறமையும், இலக்கை மையமாகக் கொண்டு செயலாற்றும் ஆற்றலும் கொண்ட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தற்போது வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் காலியாக உள்ள உறவு மேலாளர் (Relationship Manager) மற்றும் மூத்த உறவு மேலாளர் (Senior Relationship Manager) […]

September 28, 2026 admin
அன்றாட வாழ்வில் நுண்-பெண்ணியம்! Exclusive

அன்றாட வாழ்வில் நுண்-பெண்ணியம்!

பெண்ணியம் என்பது பெரிய போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்ல; அது நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சிறிய மாற்றங்களின் மூலமாகத் தொடங்குவதாகும். சமுதாயத்தில் பல ஆண்டுகளாக ஊறிப்போன பாலின பாகுபாடுகளையும், ஆணாதிக்கச் சிந்தனைகளையும் தடுத்து நிறுத்தப் பெரிய அளவிலான சட்டங்கள் மட்டுமே போதாது. நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்களிலும், அலுவலக மற்றும் குடும்பச் சூழலிலும் நாம் கடைப்பிடிக்கும் நுண்ணிய செயல்களே (Micro-feminism) சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கத் துணைபுரிகின்றன. அலுவலகங்களில் நிலவும் மறைமுகச் சமத்துவமின்மை பணிபுரியும் […]

September 27, 2026 admin
டோரதி: விமர்சனம்! Running News

டோரதி: விமர்சனம்!

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த அத்தனை எல்லைகளையும் மீறி, மனப்பிறழ்வின் உச்சத்தில் நின்று கொண்டு எடுக்கப்பட்ட ஒரு வக்கிரமான படைப்புதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்துள்ள ‘டோரதி’ திரைப்படம். சமூகத்தின் மீது எந்தவிதப் பொறுப்புணர்வும் இல்லாமல், பல லட்ச ரூபாய் பணத்தைச் செலவு செய்து இளம் தலைமுறையினரின் மனதை நச்சுப்படுத்தவும், நமது கலாச்சாரக் கட்டமைப்பைச் சிதைக்கவும் இத்தகைய படங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்பதை இப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த சோ கால்ட் டைரக்டர் முன்னொரு காலத்தில் […]

September 27, 2026 admin
உலக சுற்றுலா தின அனுபவங்களும் டிஜிட்டல் எதிர்காலமும்! Exclusive

உலக சுற்றுலா தின அனுபவங்களும் டிஜிட்டல் எதிர்காலமும்!

மனித குலத்தின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்றாகவும், வாழ்வின் சலிப்பூட்டும் சூழலில் இருந்து புத்துணர்ச்சி பெறும் உன்னத வழியாகவும் சுற்றுலா காலங்காலமாகத் திகழ்ந்து வருகிறது. கற்றது கைமளவு, கல்லாதது உலகளவு என்ற பொன்மொழிக்கு ஏற்ப, நாம் வாழும் உலகத்தைப் புரிந்து கொள்ளவும், உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள கலாச்சாரங்களை நேரில் அனுபவிக்கவும் சுற்றுலா பெரிதும் உதவுகிறது. அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் தருவதில் பயணங்களுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. வெறும் பொழுதுபோக்காகத் […]

September 27, 2026 admin
டிரம்பின் ஊடகத் தாக்குதல்: நீதிமன்ற உத்தரவும் வெள்ளை மாளிகையின் மறுபிரவேசமும்! Exclusive

டிரம்பின் ஊடகத் தாக்குதல்: நீதிமன்ற உத்தரவும் வெள்ளை மாளிகையின் மறுபிரவேசமும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முன்னணி ஊடக நிறுவனங்களை வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதித்த நிகழ்வு, உலக அளவில் ஊடகச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகப் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இத்தகைய அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிராக ஊடகங்கள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டுள்ள விதம் முக்கியமான திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. ஊடகத் தடை மற்றும் சட்டப் போராட்டம் சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ உள்ளிட்ட முன்னணி ஊடக நிறுவனங்கள் தங்களைப் பற்றித் […]

September 26, 2026 admin
மீசைய முறுக்கு 2 – விமர்சனம்! Running News

மீசைய முறுக்கு 2 – விமர்சனம்!

சென்னை மண்ணின் வியர்வையிலும், விளிம்புநிலை மக்களின் அடிமட்டக் குமுறல்களிலும் இருந்து உருவான கானா இசை, வெறும் எளிய பொழுதுபோக்குக் கலை வடிவமாக மட்டுமல்லாமல், நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வரலாற்றைப் பேசும் அசல் வரலாற்று ஆவணமாகவும், அவர்களின் தினசரி வாழ்வியல் போராட்டங்களை யதார்த்தமாக வெளிப்படுத்தும் வலிமையான ஒரு சமூக ஆயுதமாகவும் காலங்காலமாகத் திகழ்கிறது. குறிப்பாக, துக்க வீடுகளில் இறந்தவர்களின் உடலைச் சுற்றி நின்று அவர்களின் இழப்பைச் சத்தமாகப் பாடி அழுத ஒப்பாரி மரபிலிருந்தும், வறுமையும் பிழைப்புத் தேடி […]

September 26, 2026 admin
தொலைக்காட்சியின் எதிர்காலம்:அவசரமான அனுமானங்களும் உண்மையும்! Running News

தொலைக்காட்சியின் எதிர்காலம்:அவசரமான அனுமானங்களும் உண்மையும்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்களின் அதீத வளர்ச்சி மற்றும் ஓடிடி (OTT) தளங்களின் பெருக்கம் காரணமாக தொலைக்காட்சி ஊடகம் அழிந்துவிடும் என்ற கணிப்புகள் பரவலாக நிலவி வருகின்றன. பார்வையாளர்கள் சிதறிவிட்டதாகவும், விளம்பர வருவாய்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டதாகவும் கூறப்பட்டாலும், தொலைக்காட்சியின் வீழ்ச்சி பற்றிய இத்தகைய அவசரமான அனுமானங்கள் உண்மையான மற்றும் பெரிய கதையைத் தவறவிடுகின்றன என்று அண்மையில் வெளியாகியுள்ள ஒரு முக்கிய ஆய்வு தெரிவிக்கிறது. தொழில்நுட்ப மாற்றம் மற்றும் மனிதர்களின் பகிர்வுப் பழக்கம் தொலைக்காட்சி என்பது கடந்த காலத்தில் […]

September 26, 2026 admin
உடனடி செய்திகள்