சர்வதேச சுகாதார தினம்!- மன அழுத்த விழிப்புணர்வு தேவை!
ஆண்டு தோறும் ஏப்ரல் 7ம் நாள் சர்வதேச சுகாதார தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 1950ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்று உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு ‘மன அழுத்தம் நாம் பேசுவோம்’ என்ற கருப்பொருளை அறிவித்துள்ளது. நோயின் அறிகுறியை பொறுத்து மிதமான மற்றும் தீவிரமான மன அழுத்தம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

l உலகில் 30 கோடி மக்கள் வயது, பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். l மன அழுத்த நோய் உடல் குறைபாடு நோய்களுக்கு இட்டுச் செல்கிறது. l உலகில் அதிக நோய்களுக்கு காரணியாக மன அழுத்தம் உள்ளது.
l மன அழுத்தத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
l மன அழுத்தத்தின் உச்சக் கட்டமாக தற்கொலை முயற்சிக்கு தூண்டுகிறது. முறையான தரமான மன அழுத்தத்திற்கு பயனுள்ள சிகிச்சை முறைகள் இருப்பதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும் பயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை.
உலகில் மன அழுத்த நோயால் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 15 வயது முதல் 29 வயது வரை நடைபெறும் மரணங்களுக்கு மன அழுத்த நோய் 2வது காரணியாக விளங்குகிறது. நீண்டகால மிதமான தீவிரமான மனஅழுத்த நோய் வேறுசில சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த நோயுள்ளவர்கள் தங்களது அன்றாட பணிகளைச் செய்வதில் மிகவும் சுனக்கமாக பள்ளி மாணவர்கள் படிப்பதில் ஆர்வம் குறைந்து காணப்படுவர்.
தரமான முறையான மருத்துவ சிகிச்சைகள் இருந்தும் 10 சதவீதம் மக்களே தரமான சிகிச்சை பெறுகின்றனர். இதற்குக் காரணம் மன அழுத்த நோய் குறித்து பயிற்சி பெற்ற தரமான ஊழியர் இல்லா மையும், மன அழுத்த நோய் குறித்த சமூகத்தின் தவறான புரிதலும் தவறான மதிப்பீடும் இதற்குத் தடையாக உள்ளது. தனிநபர் வருமானம் குறைவாகவோ, அதிகமாகவோ உள்ள நாடுகளில் கூட இந்த நோய்க்கான முறையான பரிசோதனை செய்து அதற்கான மருத்துவத்தை கொடுக்க இயலவில்லை. மனஅழுத்த நோய் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், நாம் மற்றும் நம்மை நேசிப்பவர்களின் மரணம், உறவுகளின் முறிவு, மது அருந்துதல், போதை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் தொடர்ச்சியான உடல்நலக் குறைவினால் மனஅழுத்த நோய் அதிகமாகிறது.
மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாத மனஅழுத்த நோயாளிகள் தங்களது குடும்பம் மற்றும் சமூக நலன்களிலிருந்து விலகியே இருப்பார்கள். இந்த நோயைக் குறைபாடு உள்ளவர்களுடன் தொடர்ச்சியாக பேசி சரி செய்யலாம் அல்லது மன அழுத்த முறி மருந்துகளை எடுத்தும் குணமாக்கலாம் அல்லது இரண்டும் கலந்த சிகிச்சையாகவும் பெறலாம்.


