உலகப் புற்றுநோய் நாள்

உலகப் புற்றுநோய் நாள்

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் உயிரிழக்கும் ஒவ்வொரு 5 பேரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான வளர்ச்சி, அப்பகுதியில் சுற்றியுள்ள திசுக்களையும், உறுப்புகளையும் பாதிக்கின்றன. இந்த நோயே புற்றுநோயாகும். சரியான சிகிச்சை எடுக்காமல் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் புற்றுநோய் மரணத்தை உண்டாக்குகிறது. அத்துசன் புற்றுநோய் உடலின் திசுக்களில் தொடங்கி, நரம்பு மண்டலம், ரத்தம், உடலின் உள்ளுறுப்புகளான நுரையீரல், கணையம், சிறுநீரகம், கல்லீரல், விதைப்பை, கருப்பை, கருப்பை குழாய் உள்ளிட்ட உறுப்புகளிலும் சருமம், வாய் போன்ற உடலின் வெளிப்புற பகுதிகளில் கூட உருவாகிறது என்றும் , பாலின வேறுபாடின்றி அனைவருமே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாததே உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் புற்றுநோய் குறித்த விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய தெளிவை உருவாக்கவும், நோய் குறித்த அச்சத்தை விலக்கவும் இந்த புற்று நோய் தினம் உதவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது..!

புற்றுநோய் பாதிப்பால் ஆண்டு தோறும் இறப்பின் விகிதமானது அதிகரித்து வருகின்றது. மரபு வழி, புகையிலை பழக்கம் மற்றும் மோசமான சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உருவாகும் இந்த புற்றுநோய் மனித வாழ்வில் பேரிடியாக உள்ளது.புற்றுநோய் குறித்த அச்சம் என்பது இயல்பான ஒன்று. ஏனெனில், உலகில் கண்டறியப்பட்டுள்ள நோய்களில் மிகவும் கொடிய நோயின் பட்டியலில் புற்றுநோயும் ஒன்று. ஆகையால், புற்றுநோயால் பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்கள் அச்சம் கொள்வது இயல்பே. இருப்பினும், தற்போது பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு மருத்துவத்துறையானது வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை இறப்பிலிருந்து காக்க இயலும்.

நம் நாட்டில் புற்றுநோய் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போது உள்ளதைப்போல இன்னும் 20 ஆண்டுகளில் இருமடங்கு புற்றுநோய் தாக்கம் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 1,800 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். 2022 முதல் 2024-ம் ஆண்டுகளில் மட்டும் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்தது. 2022-ல் ஏறத்தாழ 21.50 லட்சம் நோயாளிகள் புதிதாக கண்டறியப்பட்டனர். சுமார் 13 லட்சம் பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர். ஏறத்தாழ 32.50 லட்சம் பேர் புற்றுநோயுடன் வாழ்ந்துவருகின்றனர். நம் நாட்டில் மார்பகம், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை வாய், இரைப்பை, நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள்தான் அதிகம்.

புற்றுநோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள சில தகவல்கள்:

உலக அளவில் உயிரிழப்பு ஏற்பட இரண்டாவது காரணமாக புற்றுநோய் உள்ளது.

மிகவும் வருமானம் குறைவான அல்லது சராசரி வருமானத்தை கொண்ட நாடுகளில் தான் 76% உயிரிழப்புகள் புற்றுநோயால் உண்டாகின்றன

காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளாமை, உடற்பயிற்சி செய்யாமை, புகையிலை மது பழக்கம், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளாமை உள்ளிட்ட காரணங்களால் 3ல் ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்கிறார்

புற்றுநோய் உயிரிழப்புகளில் புகையிலை பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சராசரியாக 32% புற்றுநோய் உயிரிழப்புகளுக்கு புகையிலை பொருட்கள் காரணமாகின்றன

அதிக வருமானம் உள்ள நாடுகளில் புற்றுநோயுக்கான சிகிச்சைகள் 93% கிடைப்பதாக கூறப்படுகிறது.

வருமானம் குறைந்த அல்லது சராசரி வருமானம் கொண்ட நாடுகளில் 5ல் ஒரு நாடு தான் புற்றுநோய் கொள்கையை இயக்க தேவையான தரவுகளை கொண்டுள்ளது.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பள்ளிகள், கல்லூரிகள், தெருக்கள் என பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் புற்றுநோய் தீவிரம் அடைந்தே வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) மேற்கொண்ட ஆய்வில், பெரும்பாலான நாடுகள் உலகளாவிய சுகாதார பாதுகாப்பிற்காக (புற்றுநோய் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை) போதுமான நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை என்பது தெரியவந்துள்ளது.

9 ஆண்களில் 1 ஆண் என்ற வீதத்திலும், 12 பெண்களில் 1 பெண் என்ற வீதத்திலும் உயிரிழந்துள்ளதாகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், 2050ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் எனவும், இது 2022ஆம் ஆண்டில் இருந்த பாதிப்பை விட 77சதவீதம் அதிகம்

xr:d:DAE_0PK0oBI:130,j:47627943327,t:23022502

புற்றுநோய்க்கான அறிகுறிகள்:

உடலில் தேவையில்லாத கட்டிகள் உண்டாவது.

வலி இல்லாவிட்டாலும் கட்டிகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்

பசியின்மை, திடீர் எடையிழப்பு, ஜீரணக்கோளாறுடன் கூடிய வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்

தொடர் இருமல், மாதவிடாய் இல்லாத சமயத்திலும் உதிரப்போக்கு

மேற்கொண்ட பிரச்னைகள் என்றாலே புற்றுநோய் தான் என்ற உறுதி இல்லை என்றும் ஆனால் இவையும் புற்றுநோயுக்கான ஆரம்பகால அறிகுறி என்பதால் எச்சரிக்கை அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

புகையிலை மதுப்பழக்கத்தை அடியோடு கைவிடுவது

புகைப்பிடித்தலை கைவிடுவது மற்றும் புகைப்பிடித்தல் இல்லாத சுற்றுப்புறத்தை உறுதி செய்தல்

சரியான உணவுக்கட்டுப்பாடு. காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது

சரியான உடற்பயிற்சி செய்து உடல்நிலையில் கவனம் கொள்ளுதல்

கதிரியக்க இடங்களில் பணியாற்றுவோர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுதல்

ஆரம்ப அறிகுறைகளை கண்டறிந்து முதன்மை தடுப்பு முறையை மேற்கொள்வது

புற்றுநோய் வந்துவிட்டால் வாழ்வே முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்றும் மன உறுதியும், முறையான சிகிச்சையும், நோயுக்கான அறிகுறிகளை அறிந்து முன்னரே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதும் புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளும் வழிமுறை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!