நாடாளுமன்றத்தில் வரும் 15-ம் தேதி ராமாயணம் அனிமேஷன் திரைப்படம் சிறப்பு காட்சி!

நாடாளுமன்றத்தில் வரும் 15-ம் தேதி ராமாயணம் அனிமேஷன் திரைப்படம் சிறப்பு காட்சி!

ம் பாரத தேசத்தின் பெருங்காப்பியம் ‘ராமாயணம்’ பழங்காலத்தில் தெருக்கூத்து, நாடகம், இலக்கியம் வாயிலாக மக்களிடையே பரப்ப பட்டுச்சு. சினிமா வந்த பிறகு கருப்பு வெள்ளை காலம் முதல் இன்றைய டிஜிட்டல் காலம் வரை ராமாயணம் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருது. தற்போது இந்த ராமாயண கதையால் ஈர்க்கப்பட்ட ஜப்பானியர்கள் ராமாயண கதையை அனிமேஷன் படமாக எடுத்துள்ளனர். இந்த கதையில் கம்ப ராமாயணம் மற்றும் துளசிதாஸ ராமாயணத்தின் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ராமாயணத்தின் பெருமையும், ராம நாமத்தின் புகழும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதற்கு ஜப்பானிய பின் புலத்தில் உருவாகியுள்ள இந்த ராமாயணம் அனிமேஷன் படமே ஒரு சாட்சி.

இத்தனைகும் 1993-ம் ஆண்டு வெளியான ஜப்பான் – இந்திய திரைப்படமே ராமாயணா: தி லெஜன்டு ஆஃப் பிரின்ஸ் ராமா’. இது 24-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் வெளியாகவில்லை. 2000-ம் ஆண்டு துவக்கத்தில் டிவி சேனல்களில் ராமாயணம் மீண்டும் வெளியாகி மக்களிடையே பிரபலம் ஆனது. இந்நிலையில் ராமாயணம் அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த ராமாயணா அனிமேஷன் திரைப்படம் நாடாளுமன்றத்தில் வரும் 15-ம் தேதி சிறப்பு காட்சியாக வெளியிடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் மற்றும் கலாச்சார துறையைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து கீக் பிக்ச்சர்ஸ் விநியோக நிறுவனத்தின் துணை நிறுவனர் அர்ஜுன் அகர்வால் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் ராமாயணம் அனிமேஷன் திரைப்படம் திரையிடப்படுவது எங்களுக்கு பெருமையான விஷயம். எங்கள் பணிக்கு இந்த உயர்ந்த அங்கீகாரம் கிடைப்பது எங்களின் பாக்கியம். இந்த சிறப்பு காட்சி, திரைப்படத்தை காட்டுவது மட்டும் அல்ல, நமது வளமான பாரம்பரியத்தையும், காலத்தால் அழியாத ராமாயண கதையையும் கொண்டாடுவது ஆகும். இவ்வாறு அர்ஜுன் அகர்வால் கூறினார்.

error: Content is protected !!